Wednesday, May 6, 2015

ஆனந்த பைரவி

வலை நண்பர் திரு ஸ்ரீராம் அவர்கள் தியாகராஜ சுவாமிகள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து உள்ளார்.
+Balu Sriram 
ஒரு இசை வல்லுநர் பாடகர் சுவாமிநாதன் என்பவர் ஆனந்த பைரவி ராகத்தில் மிகவும் திறம் படைத்தவராக விளங்கினார். அவரைப் பற்றி கேள்விப்பட்ட தியாகய்யர் அவர் பாடுவதை ரசிக்கச் செய்ய, தியாகய்யரிடம் சுவாமிநாதன் ஒரு வரம் கேட்டாராம்.

நீங்கள் இனி ஆனந்த பைரவி ராகம் பாடக்கூடாது என்று.  தியாகய்யரும் சரி என்று சொல்லிவிட்டாராம். 

அதனால் தான், தியாகராஜ சுவாமிகள் அன்று வரை ஆனந்த பைரவி யில் இட்ட 3 கீர்த்தனைகளுக்குப்பின் வேறு எதுவும் அதே கீர்த்தனையில் இட வில்லை என்ற செய்தி
இந்த வலைப் பதிவு சொல்கிறது. 

இதைப் படித்த உடன் எனக்குத் தோன்றியதை ஒரு பின்னூட்டமாக எழுதியதை கீழே தந்து இருக்கிறேன். 

அதை படிக்குமுன்பு, இன்னொரு சந்தேகம் ஐயம் மனதில் வருகிறது. 
+Geetha Sambasivam 
உதாரணமாக, வலை நண்பர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் பலவித பதார்த்தங்களை சமைப்பது எப்படி என்று நுட்பமாக விவரிக்கின்றனர்..  அவர் செய்த மோர்குழம்பு மிகப்பிரமாதம் என்று பலரும் பாராட்டினர் என்றால், அதை 

நீங்கள் யாருமே மோர்குழம்பு தயார் செய்யும் பாணியை விவரிக்ககூடாது என்று 144 போட்டால் எப்படி இருக்கும் !!

இன்னொரு உதாரணம். 
பெருமாள் உத்சவ காலத்தில் ஒரு நாள் மோகினி அவதாரம். என்று புடவை உடுத்துகிறார் .அந்த அலங்காரத்தைப் பார்த்து மகிழாதவர் இருக்க முடியாது. தாயாரே அதைப் பார்த்து மனதுக்குள் சிரித்து மகிழ்வாரோ என்னவோ...

எ"ன்னை விட உங்கள் அலங்காரத்தை தான் பக்தர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, நீங்கள் இனி மோகினி அவதாரம் எடுக்கக் கூடாது "என்று அவர் பெருமாளிடம் சொன்னால் எப்படி இருக்கும் !!
என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன். 

சரி. 

நான் இட்ட பின்னூட்டத்தைப் படிக்கவும். 
எனக்கு என்னவோ அந்த சுவாமிநாதன் கேட்ட வரம் 
சரி எனத் தோன்றவில்லை. 

தான் ஒரு குறிப்பிட்ட 
காரியத்தில், அல்லது பொருளில் திறமை வாய்த்தவர் என்பதற்காக, மற்ற எவரும் அந்த காரியத்திர்குள்ளே வரக்கூடாது என்று 
சொல்வது அல்ல நினைப்பது கூட மனதில் ஏற்படும் பொறாமை தான் என நினைக்கத் தோன்றுகிறது. 

இரண்டாவது விஷயம் சொல்லவேண்டும். ராகங்களைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ராகத்திற்கும் ஆரோஹனம், அவரோஹனம் என்று ஸ்வரங்களை சீர் படுத்தி இருப்பினும், அதை எந்த வாறு அந்த ஸ்வரங்களை உபயோகப்படுத்தி, பாடுவது, முக்கியமாக ஆலாபனை அல்லது, கீர்த்தனை நடுவே ஸ்வரங்கள் பாடுவது அவரவர் கற்பனை திறம், அதன எல்லை யைப் பொறுத்தது. 

அண்மையில், இளைய ராஜா அவர்கள் மோகனம் என்று நினைக்கிறேன். ஆரோகனத்தில் மட்டுமே ஒரு பாட்டு முழுக்க ஸ்வரம் இட்டு இருக்கின்றார். இதுவரை இசை உலகில், எந்த ஒரு கம்பொசருமே நினைத்துப் பார்க்ககூட சாதனை இது. 

இன்னொரு சமயம், ஒரு ராகத்தில் மூன்று ஸ்வரங்களை மட்டும் எடுத்து பிரயோகம் செய்து இருக்கிறார்.  

இதெல்லாம் முக்கியமாக கர்நாடாக சங்கீதம் ஒரு எவலூஷணரி ப்ராசஸ் ல் இன்னமும் இருக்கிறது   பால முரளி சில புதிய ராகங்களை வகுத்து இருக்கிறார். 

நல்ல வேளை ..  அந்த சுவாமிநாதன் ஆனந்த பைரவி ராகத்தை தான் மட்டும் தான் பாடவேண்டும் என்று சொல்லவில்லை. 

தானும் சிறக்கவேண்டும். மற்றவர்களும் சிறக்கவேண்டும் என்று நினைப்பதுவே மனித நேயம். 

அது தான் வின் வின் சிச்சுவேஷன். 

சுப்பு தாத்தா. 

Monday, May 4, 2015

படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம்.

அழகின் சிரிப்பு என 
அல்லி மலர்வது போல 
அள்ளிப்பருகத்தூண்டும் 
அமுதம் கற்கண்டு அன்னம் போல 
கவிதை ஒன்று எனது வலை அன்பர் +
பிரான்ஸ் கவிஞர் பாரதிதாசன் வலையில் இன்று 

படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம். 
இங்கே அதற்கான வழி. 

அதற்கு நான் இட்ட 
பின்னூட்டம்.


இமயத்திலிருந்து வரும் கங்கை நதி போல் அல்லவா 
இக்கவிதை தங்கள் இதயத்தில் இருந்து பொங்கி வருகிறது !!!

இந்தோள ராகத்திலே  மெட்டு  இட்டு, 
இன்று நீவிர் துதி பாடும் 
ஈசன் வேஅமுதம் ங்கடவன் பாதங்களில்  அர்ப்பணிப்பேன். 

சுப்பு தாத்தா.


துளசி மேடம் வலைப்பதிவு ரொம்ப நாள் கழிச்சு போனேன். அவங்க இப்ப குருவாயூர் பக்கம் டூர்லே இருக்காக.

அவங்க  பிரியாணிக் கட்டுரையே , சாரி, பிரயாணக் கட்டுரையே எப்பவுமே எனக்கு ஒரு ஆன்மீக தொடர் இலக்கியம். 
சுவாரசியமான செய்திகள் வெளியிடுவதில் அவரை மிஞ்ச யாருமே இல்லை. இப்ப கோபால் சார் தான் சென்சார் போர்டு சீப்  என்று வேறு சொல்லியிருக்காரு. 

+Tulsi Gopal 
தலைப்பைப் பார்த்ததும் பயந்தே போய் விட்டேன். 

ஒரு வரி விடாம, தப்பு, தப்பு, ஒரு எழுத்து கூட விடாம,
படிச்சு முடிச்சப்பறம் தான் தெரியுது. 

என்னது..ஒரு திகில் தலைப்பு வச்சுட்டீக...

நானும் திருச்சூர் க்கு சென்று இருக்கிறேன். குருவாயூர் லே பாஞ்ச ஜன்யம் விருந்தினர் வீட்டில் ( கஸ்ட் ஹௌஸ் ) தங்கியிருக்கிறேன். 
கேசவன் இப்ப சிலையா இருக்கார். நான் உயிரோட இருக்கும்போதே பாத்திருக்கேனே !!

சுதா.
(சுப்பு தாத்தா தாங்க.. நம்ம மோகன்ஜி  என் பெயரை மாத்தி வச்சுட்டாரு இல்ல) 

Friday, May 1, 2015

எனக்கு நானே

நமக்கென்று ஒரு வலையில்
நாம் எண்ணியதெல்லாம் எழுதுவது ஒரு நிலை.

நாம் கண்டு ரசிக்கும்  வலைப்பதிவுகளுக்கு எல்லாம் சென்று
நித்தம் ஒரு பின்னோட்டம் எழுதுவதோ ஒரு கலை.

நாமே ஒரு கவிதை எழுதி அதை நாமே ரசித்து ரசித்து
சுகம் காணுவது ஒரு நிலை.

நமது நண்பர் பலர் எழுதும் கவிதைகளை ரசித்து ரசித்து
பாடி பாடி மகிழ்வதும் ஒரு நிலை.

பின் நோக்கிப் பார்க்கையிலே
சென்ற பதினான்கு வருடங்களாக
பத்தாயிரம் பின்னூட்டங்களுக்கு மேல் இட்டு இருக்கிறேன்

இது ஒரு சாதனை என்று சொல்லவில்லை.
வெட்டி வேலை எனவும் சொல்லவில்லை.

பின்னோட்டம் இடுவதால், ஒரு நன்மை இருக்கிறது.

எந்த ஒரு பொருளையும், நிகழ்வையும்,
பார்க்கும்போது, படிக்கும்போது,
எழுதுபவர் மட்டுமன்றி, அதனைப் படிப்பவர் பலரின்
கண்ணோட்டங்கள் தெரியவருகின்றன.
அவர்கள் பார்வையின் கோணங்கள் சில சமயங்களில்
அதிசயிக்கச் செய்கிறது என்றால் அது மிகையல்ல.மற்றும், இக்காலத்து சிந்தனைகள் மத்தியிலே,
நான் எந்த வழியில் செல்கிறேன்
என்பது மட்டும் இன்றி, 
எனது சிந்தனைகள் ஒன்றுக்கொன்று பொருத்தமானவை தானா?
இல்லை அவற்றினுள்ளே முரண்பாடுகள்  இருக்கின்றனவா
என்று
அவ்வப்போது உணர்ந்துகொள்ள இந்த பின்னோட்டம் இடுவது உதவி செய்கிறது. ஆக அதனை
ஒரு கருவி எனவே நினைக்கிறேன்.

சென்றவிடாது செலவிடாது தீது ஓரி
நன்றின் பால் உய்ப்பது அறிவு

என்பார் வள்ளுவர்.

நாம் நல்ல இடங்களுக்குச் செல்லவேண்டும் .
அதை விட, நாம் செல்லும் இடங்கள் எல்லாமே
நல்லவை தானா எனத்தெரிந்து கொள்தல் வேண்டும்.

நல்ல என்பதற்கு உரிய பொருள் புரிந்து கொள்ளவேண்டும்.

எனக்கு நானே சொல்லும் அறிவுரை இது.

எந்த ஒரு மறை நூலையும் சரிவரப் புரிந்துகொள்ள ஒரு குருவின் வழியே கற்றுக்கொள்வதே சிறந்ததாம். 

குரு என்பவர் ஆசிரியர்.
நமது வாழ்க்கை எனும் பாதையிலே முதல் விளக்கை ஏற்றி வைப்பவர் அவரே.

குரு எனும் சொல்லில் இரு எழுத்துக்கள்.

கு என்னும் எழுத்துக்கு  இருட்டு என்றும்
ரு என்னும் எழுத்துக்கு அதை நீக்குபவர் என்றும் பொருள்.

தமிழ் மறையாம் வள்ளுவத்தை முழுமையாகப் படித்துணர
முதற்கண்
பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர் போன்றோரின் உரைகள்
நல்ல வழிகாட்டியாக அமைந்து இருக்கின்றன.மேலாக நாம் படிக்கையிலே ஒரு பொருள் . அந்த நூலை மற்றவர் விமர்சங்களின் வழியாக, அவர்களின் விரிஉரை வழியாக, அவர்களின் மொழி பெயர்ப்புகளின் வழியாக படிக்கையிலே ,

இந்த நூல்களின் உட்கருத்து, உட்பொருள் நாம் அறியாது சென்று விடும் அபாயம் இருக்கிறது.

பல நூல்களை நாம் படிக்கும் விதம் நுனிப்புல் மேய்வது போன்று தான் இருக்கிறது.

அகல உழுவதிலும் ஆழ உழு என்பது இவ்விடத்தே மிகப்பொருந்தும்.

இத்தனை படித்தேன் என்று பெருமைப்  படலாம் . தவறு அல்ல.
ஆயினும், எத்துணை அதிலிருக்கும் நுட்பொருள் உணர்ந்தேன்  என நாம்
நமக்குள்ளே ஒரு வினா எழுப்பி விடை பெறுதலும் நன்றே.

பிள்ளைப்பருவத்தில், பள்ளிகளில் படிக்கும் நேரத்தில் குறள் பல படித்திருக்கிறோம். இப்போது ஒரு அறுபது அறுபத்தி ஐந்து வருடங்களுக்குப்பின்னும் அதே குறட்பாக்களை படிக்கும்போது தோன்றும் பொருள் இன்னமும் ஆழ்ந்த தாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆங்கில இலக்கியத்தில், கல்லூரியில் சேக்ஸ்பியரின் கிங் லியர்,கீட்ஸ்,வோர்ட்ஸ்வொர்த் , எலியட் அவர்களின் ஆக்கங்களை நான் திரும்பவும் படிக்கையிலே நான் புரிந்திரா பொருள் இன்று கண்முன்னே நிற்பது வெள்ளிடை மலை.

இக்பால் கவிதைகள், ரஹீம் , துளசி, கபீர் தோஹாக்கள், தியாகப்பிரும்மத்தின் கீர்த்தனைகள், ஹரிவம்ச ராய் பச்சன் (அமிதாப் பச்சன் அவர்களின் தந்தை) கவிதைகள், தாகூரின் கவிதைகள் எல்லாமே இலக்கியச் சோலைகள்.

அதில் தொடர்ந்து நாம் நின்று தின்றோம் எனும்போது தான் அவற்றின் பொருள் முற்றும் புரிந்தோம், வென்றோம் என்ற நிலை.

நாம் அன்று சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்று எனது வாதம் அல்ல.
நம்முடைய அனுபவப் பின்னணியிலே பழங்கால நூல்களுக்குப்
புதுப்புது அர்த்தங்கள் பரிணமிக்கின்றன என்று சொல்ல வருகிறேன்.

அண்மையில் நான் எழுதிய பின்னோட்டம் ஒன்றிலிருந்து.....

வானவில்மனிதன் வலைப்பதிவுக்கு நான் இட்ட பின்னோட்டம்.

//மோகன் ஜியின் கதையிலிருந்து வெகுதூரம் விலகி வந்தாச்சு!//
 நான் அப்படி நினைக்கவில்லை. அது ஒரு வெளித் தோற்றமே.
 எல்லா நடப்புகளுக்கும் ஒரு துவக்கம் என்றும் முடிவு என்றும் இருக்கும்.
 இருப்பினும் சிலவை சிந்தைக்கும் சிந்தனைக்கும் பொருட்களுக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.
அசிந்த்யா; கலு யே பாவா ந தாம்ச்தர்கெண யோஜயேத்
பிரக்ருதிர்ப்ய:பரம் யச்ச தத சித்தயஸ்ய லக்ஷணம்
 சிந்தனைக்கும் சிந்திக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் பல உள . அவற்றினை நாம் ஒருவருக்கு ஒருவர் செய்யும் தர்க்கத்தால் தீர்க்கலாகாது. ( அதனால் பலன் ஒன்றும் இலாது என்ற கருத்தினாலும் )
அவ்வாறான விஷயங்கள் வசிக்கும் இடங்களுக்கு,
ந தத்ர வாக்கச்சதி நோ மன:
(மனமோ வாக்கோ அங்கு செல்வதில்லை)
சரி, புலன்களுக்கு அப்பாற்பட்டத்தாக ஒரு பொருள் இருப்பின் அதை அடைவது எங்கனம்?
என்ற கேள்வி வரும்போது,
தத் விக்க்ஞானார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்
அதை (அந்த பரம்பொருள் என்ன என்று தெரிந்து அதை) அடைய ஒருவன் குருவை அணுகவேண்டும்.
மனோவுக்கு
அந்த நுட்பமான பொருளை ஒரு உருவமாய் ஆராதிக்க இயலவில்லையே தவிர,
அந்த ஆத்யந்த சக்தியின் லீலையை உணர முடிந்திருக்கும்.
ஆகவே, மேற்கொண்டு தொடர,
குருவை அணுகவேண்டும்.
அன்னை  தானே முதல் ஆசான்.  
`

அவளை அழைத்துச் செல்கிறான்.
சுதா.