Monday, August 31, 2015

குதிரை சாணியும் சீரக கஷாயமும்

எனது வலை உலக நண்பர் திரு ஸ்ரீ ராம் அவர்களின் எங்கள் ப்ளாக் லே
வெள்ளை அப்பம் எப்படி செய்வது என்று
+Balu Sriram
ஒவ்வொரு ஸ்டப் ஆக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

நாமும் செய்வோம் என்று சுப்பு தாத்தாவும் வெள்ளை அப்பம் செய்ய
ஆரம்பித்தார்.

என்ன நடந்தது என்பதை ஒரு பின்னூட்டம் ஆக போட்டு இருக்கிறார்.

நீங்களும் அதை படியுங்கள்.

படிப்பதற்கு முன், எங்கள் ப்ளாக் சென்று வெள்ளை அப்பம் செய்யும் முறை என்ன என்பதை படிக்கவேண்டும்.

(சீரகம் என்ன கலர் என்று அண்ணனுக்கு போன் செய்து கேட்டேன். குதிரைச்சாணி கலர் என்றார்//

அவசர அவசரமாக எதிர்த்த கடையிலே சீரகம் வாங்க போனேன். எங்கள் வீட்டிலே சீரகம் பொடியாகத் தான் இருந்தது. ஒரு ஸ்பூன் சீரகப் பொடி ஒரு ஸ்பூன் சீரக த்திற்கு மேலாக இருக்கும் என்று மனசு உறுத்தியது.

அடுத்து விதி என்னைப் பார்த்து சிரிக்கிறது.


கடைக்காரன் கொடுத்த சீரகம் குதிரைச் சாணி கலர் இருக்குமே ..நீ கொடுத்தது அப்படி இல்லயே என்றேன். அவன் என்னை ஒரு தினுசா பார்த்துவிட்டு,


ஆம்பளக் குதிரையா, பொம்பளக் குதிரை சாணம் வெவ்வேறு கலர் லே இருக்கும். தெரியுமா என்கிறான்.


வெளிர் க்ரே கலர் லேந்து டார்க் கலர் க்ரே வரைக்கும் நார்மலா இருக்கும். அதற்கு போடற கொள்ளு என்ன கலரோ அதைப் பொறுத்தது. எதற்கும், நீங்கள் குதிரை ஒன்றைப் பார்த்து விட்டு , அந்த சாணத்தைப் பார்த்து விட்டு சீரகம் வாங்குங்கள். என்றான்.


அதுவும் சரிதான். குதிரை எங்கே பார்க்கலாம் என்றேன்.

அப்பறம் தான் எனக்கே தோன்றியது.

கிண்டி ரேஸ் கிளப்பில் பார்க்கலாம் என்று தோன்றியது. உடனே வடபழனி பஸ் ஸ்டாண்ட் சென்று 80 பஸ் ரூட்டில் சென்று கொண்டு இருந்த பொது,ஜாபர்கான் பேட் அருகே ஒரு குதிரை வண்டி யை பார்த்து உடனே அங்கு இரங்கினேன்.நான் வந்த விஷயத்தை சொன்ன உடன் அவன் அதுக்காத்தான்யா டாக்டரைப் பார்க்க வந்தேன்.என்றதும் ,

எனக்குப் புரியல்ல, ஆனா

 அப்ப தான் கவனிச்சேன். அந்த இடம் வெடிரினரி டாக்டர் டிஸ்பென்சரி.

என்ன ப்ராப்ளம் என்றேன்.

குதிரை வயிறு சரியா இல்லேன்னு சீரக கஷாயம் கொடுத்தேங்க. அதுலேந்து ஒரே டயரியா வா இருக்குது என்றான்.

சீரகம் வாயுத் தொந்தரவுக்கு. சீரணம் சமனப்படுத்தும். ஆனா நீ சொல்றது வராதே.. என்றேன்.

நீங்க சொல்றது சரிதாங்க...குதிரை சீரக கஷாயம் குடிக்கணும்லே. அதுக்காக, எதிர்த்த கடைலே

எதிர்த்த கடைலே என்ன ? என்று ஒரு அச்சத்துடன் கேட்டேன்

வெள்ளை அப்பம் அஞ்சு அந்த ஆப்ப கடைலே வாங்கித் தந்தேங்க ....


ஒரே ஓட்டமாக திரும்ப ஓடி வந்ததில் மூச்சு இறைக்கிறது.

இதுக்கு அந்த தேப்லா  பெட்டர்.
+Geetha Sambasivam

மேடம் சொன்னது

Saturday, August 29, 2015

நாமகளின் நற்கருணைஇளையநிலா அவர்களின் இனிய பாடல் இது. அவர்கள் வலைக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

இவரது இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

Wednesday, August 5, 2015

சந்தங்கள் பல பாடி

வலைச்சரத்த்தில் பெரும்புலவர் பாரதி தாசன் பிரான்சு நாட்டவர் புதுவையிலே பிறந்தார் தமிழகத்தின் சிறப்பையும் வனப்பையும் பொலிவையும் தனது கவிதைகளால் வடிக்கிறார் எனின் அவரது இடுகைகளுக்கு தரப்படும் பின்னூட்டங்களுக்கு குறைவில்லை அவற்றில் சொல் அழகும் பொருள் அழகும் ஒன்றை ஒன்று விஞ்சிக்கொண்டு செயல்படும் வண்ணம்.
+sasikala2010eni@gmail.com
சசிகலா அவர்கள் இயல்பிலேயே எதையுமே கவிதையாகச் சொல்லும் திறன் படைத்தவர். இவரது பின்னூட்டம் ஒன்று கவிதையாக அங்கு வெளியிடப்பட்டு உள்ளது.

அதை பாடுவதில் என் உள்ளம் அடையும் உவகைக்கு ஒரு எல்லையும் இல்லை.


சந்தங்கள் பல பாடி