Wednesday, October 21, 2015

ஒரு தாலாட்டு

ஒரு பூந்தோட்டத்துக்குள்ளே எல்லாமே மலர்கள் தான்.
ஒவ்வொரு மலருக்கும் ஒரு வண்ணம், ஒரு வாசம்.

அந்த வாசத்துக்கு இசைய, வண்ண மலர்களைத் தொடுப்பதே ஒரு கலை.

அதே போல தமிழ் மொழி நம் மனதை ஈர்த்து அதனுள்ளே செல்லும்போது எத்தனை எத்தனை சொற்கள்

எல்லாமே முத்து, மரகதம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம், வைடூரியம்.

அவைகள் எல்லாவற்றையும் அழகுற கோத்து ஒரு மாலை ஆக கொண்டுவருவதில் தான்

ஒரு கவிஞனின் ஒரு அதீத புலமை தென்படுகிறது.

இரண்டு நாட்கள் முன்னம், நான் வலை நண்பர் சசிகலா அவர்கள் தளத்திலே ஒரு தாலாட்டு பாட்டு.

(படம்: ஹிந்து நாளிதழ்) நன்றி.
அதைப் பாராட்டிய அனைவருமே உள்ளம் நெகிழ்ந்து போன காட்சி அங்கே. .
நானும் ஒரு பின்னூட்டம் எழுதினேன்.

இதுவரை மூன்று ராகங்களில் நீலாம்பரியில் துவங்கி பாடிவிட்டேன்.
இன்னமும் மற்ற ராகங்களிலும் பாடு பாடு என்று சொல்கிறது இந்த பாடல்.
குழந்தையோ இந்தப் பாடலின் முதல் வரிக்கே தூங்கி விட்டது.

உங்களுக்குப் பிடித்த தர்பாரி கானடா ராகத்திலும் மிக நன்றாக வருகிறது.


இதை இயற்றிய சசிகலா மேடம் அவர்கள்
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்திட
புவியெங்கும் பெயர் ஒலிக்க
புவனேஸ்வரி அம்மன் அருள் புரிவார்.

சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
நீங்கள் கேட்டவுடன் தாத்தா பாட வந்துவிட்டார் பாருங்கள்.
சுப்பு தாத்தா வலைஉலகப்பாடகர் அவர் பாடி உற்சாகம் படுத்தும்விதம் மிகவும் மகிழ்வாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது எங்களுக்கு. அவருக்கு எனதுமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

 இந்தப் பாடலை நான் இதுவரை ஒன்பது ராகங்களில் பாடினேன். அற்புதமாக இசையுடன் இணைந்து வல்ல இனிய சொற்கள். 

இன்று என் குரல் ஒத்துழைக்க வில்லை. இருப்பினும் முனைந்து இதை இரு ராகங்களில் இணைத்து பாடி இருக்கிறேன்.  

வனப்பும் சிறப்பும் இந்தப் பாடல் வரிகளையே சேரும். 

 


Saturday, October 17, 2015

இனிய அன்னை சிம்ம வாகினி.

இனியா அவர்கள் காவியக்கவி வலைத்தளத்தில் இட்ட ஒரு பின்னூட்டமே ஒரு இனிய கவிதையாக பரிணமிக்கிறது. அதை நான் "நாத நாமக் கிரியை " என்னும் ராகத்தில் பாடுவதை கேளுங்கள். +Iniya Kavithai
நீங்கள் இங்கே பார்ப்பது நான் பார்த்து அதிசயித்த ஒரு அற்புத கோலம்.
இவர்கள் தளத்திற்கு சென்று பாருங்கள்.
நன்றி ஸ்னோ வைட் சோனா அவர்களுக்கு.
Incredibly Beautiful Kolam
Friday, October 16, 2015

செய்யக் கமலத்தின் மீதிருப்பாள்

இன்றைய நவராத்திரி கோலம்  
இன்றைய பாடல்.
ராகம். காவடி சிந்து. Thursday, October 15, 2015

இளைய நிலா இளமதி அவர்களின் கவிதை. துர்க்கை அம்மன் வழிபாடு.

www.mykolam.blogspot.com


நவராத்திரி இரண்டாம் நாள் வலை தனை அலங்கரிப்பது 
துர்க்கை அம்மன் வழிபாடு. 
என்ன ஒரு அழகான கவிதை இது. !!
எங்குமே உன்னருள் ஏந்திடும் பொன்னெழில்
    என்றுமே காணுகிறேன்!
  ஏற்றமே நான்பெற இன்னலும் நீங்கிட
    என்னையும் காத்திடுக!

Tuesday, October 13, 2015

துர்க்கை அம்மன்

உலக ம் முழுவதும் அறியும் வலை நண்பர் திருமதி துளசி கோபால் அவர்கள் வீட்டில் துர்கை அம்மன் பிரதிஷ்டை செய்து நவராத்திரி விழாவினை துவங்கி இருக்கிரார்கள்.

கவிநயா அவர்கள் அதற்கு ஏற்றாற்ப்போல் பாடல் இயற்ற,

அதை சுப்பு தாத்தா பிஹாக் ராகம் என்று நினைத்துக்கொண்டு பாடுவதுடன்
இந்த வருடம் நவராத்திரி விழா துவங்குகிறது.