Saturday, September 24, 2016

இன்று புரட்டாசி சனிக்கிழமை.

இன்று புரட்டாசி சனிக்கிழமை. 
புலவர் இராமானுஜம் அவர்கள் பாடலை நான் பாடி மகிழ்கிறேன்.
புலவருக்கு எனது மனமார்ந்த நன்றி. 

அவரது வலைக்குச் சென்று இந்த பாடலின் வரிகளைக் கண்டு மகிழவும். 

Monday, September 5, 2016

கண நாதனைப்பணி மனமே

வினாயகர் சதுர்த்திக்கு  இன்று எழுதிய பாடல்  சுப்புத்தாத்தாவின்  இசையமைப்பில்  கேட்கவேண்டுமே!

என்று கேட்டு இருப்பவர் திருமதி ஷைலஜா அவர்கள். கம்ப ராமாயணத்தின் பாடல்களை இவர் எழுதிய பதிவுகளை எல்லாம் பல முறை நான் படித்து வியந்து இருக்கிறேன். 

இன்று விநாயகனை வேண்டுங்கள் அவன் புகழ் பாடுங்கள் என்று அந்தத் தொந்திக் கணபதியை போற்றுபவர் போதும் போதும் என்று நினையும் வரை அருள் புரிவார் என்று சொல்லி இருக்கிறார். 

நான் பாடகன் இல்லை. எனக்குத் தெரிந்த இசையில் மெட்டு அமைத்து இருக்கிறேன். இரு ராகங்களில். 

பல்லவி..

கண நாதனைப்பணி மனமே- அனு
தினமும் ஒருக்கணமேனும். (கணநாதனை)

அனுபல்லவி
மனம் தூய்மையாகும் மகிழ்ச்சி மிகப்பெருகும்
வனவேழ முகந்தன்னை வணங்கிட வினை அகலும்(கண நாதனை)

சரணம்

ஆற்றங்கரை இருப்பான் அழகுச்சோலையிலுமிருப்பான்
போற்றித்துதிப்போர்க்கு ‘போதும்’எனும்வரை அளிப்பான்
ஔவைக்கு அருள் செய்த ஆனை முகத்தானை
எவ்வண்ணம்  தொழுதாலும் ஏற்றுக்கொள்ளுவான்(கண நாதனை)

_______________________________________________________

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள். அவன் 
பொக்கிஷத்தை , அருள் பொக்கிஷத்தை , என்றுமே மூடியது இல்லை. 

Sunday, August 14, 2016

இது புது ஆன்மீகம்

இது புது ஆன்மீகம் 

பரமனுக்கு 
பிரதோஷ 
பால் அபிஷேகம். 

பட்டப்பகல் வெய்யிலில் 
பெத்த தகப்பனைத் தெருவில் 
துரத்தி விட்டு 


தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 

Saturday, August 13, 2016

அரங்கத்திருவே!

திருவரங்கத்தில் பிறந்து தற்போது பெங்களூரில் வசிக்கும் இலக்கிய கர்த்தா கவிதாயினி
சைலஜா அவர்கள் இயற்றிய பாடல்.

திருவரங்கத்து தாயார் மஹாலக்ஷ்மி யைப்போற்றி பாடும் பாடல்.

அவர்கள் வலை யில் இன்று பதிவாகி இருக்கிறது.

அவர்களது அனுமதியை எதிர்நோக்கி நான் பாடுகிறேன்.

அந்த திருவரங்கன் அருளும் தாயாரின் கிருபையும் என்றும்
ஷைலஜா அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கிட்டும்.


Friday, June 10, 2016

74 முடிஞ்சு 75

இன்னிக்கு காலைலே கணினியைத் திறந்தால் ,
கூகிள் காரர் ஹாப்பி பர்த் டே சொல்றார்.அதுக்கப்புறம்,
ஹெச்.டி.எப்.சி.
ஐசி ஐசி ஐ மாதிரி கார்பொரேட் 
ஒவ்வொருவரும் 
மேசேஜ் அனுப்பி இருக்காங்க.

இங்கன வந்து பார்த்தா,
நான் எப்பவோ 1987 லே போய் தர்சனம் செய்ஞ்ச 
ஏரி காத்த ராமர் வந்து 
தர்சனம் தரர்றார்.

அது என்ன வால் பைண்டிங் ஆ ? சுவர்லே !!
அற்புதம். 
துளசி கோபால் வலையில் இருந்த படம்.
நன்றி மேடம்.


வாழ் நாள் முழுவதும் மனசிலே 
வச்சிருக்கவேண்டிய சித்திரம்.

தாங்க்ஸ் துளசி மேடம்.ஸ்ரீ ராம சீதா லக்ஷ்மண அனுமான் கி 
ஜெய் போலோ ஹனுமான் கி. 


இது கூகிள் லேந்து எடுத்த படம்.
ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நமஹ. 

அது சரி. இன்னிக்கு 74 முடிஞ்சு 75 துவங்குது. 
யோவ் பெருசு ! உன் வயசு என்ன அப்படின்னு 
யாருனாச்சும் இளவட்டம் கேட்டது அப்படின்னா 
74 சொல்லனுமா 75ன்னு சொல்லணுமா ?

வலை உலகப் பிதாமகராக நான் கருதும் 
புலவர் இராமானுசம் அவர்களை மானசீகமாக 
இங்கிருந்தே வணங்கி அவரது 
ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறேன். 

நேற்று எனது நண்பர் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த தமிழ் வலை உலக எழுத்தாளர் திரு மோகன்ஜி அவர்கள் என்னைப் பார்க்க  வந்து இருந்தார்.
நேரம் போனதே தெரியவில்லை. ஒரு 2 மணி நேரம்.

+mohan gurumurthy
தன்னைப் பற்றி தன தந்தை என்றோ கூறியதை இன்னமும் நினைவில்
கொண்டு உள்ளார்.

"மோகன் ஒண்ணு பூவோட இருப்பான், இல்லை,  புஸ்தகத்தோடு  இருப்பான்" என்று அவர் அப்பா சொல்வாராம் அவரைப் பார்க்க வரும் நண்பர்கள் அவர் எங்கே எனக்கேட்கும்போது.

உண்மை தான்.

மோகன்ஜி பூவாக மணக்கிறார்.
புத்தகமாக விரிகிறார். மலர்கிறார். மனத்தைக் கவர்கிறார்.
இவரது பெரும் ஆற்றல் தமிழ் வலை உலக ஆழ் கடலுள் அமிழ்ந்து இருக்கும் விலை மதிப்பற்ற முத்து.

இன்னொரு கோணத்தில் இவர் வைரக்கல். பட்டை தீட்ட தீட்டததான் பிரகாசம் எனச் சொல்வர்.
இவரோ பட்டை திட்டப்படாத வைரக்கல். இருந்தும்  இவர் பிரகாசத்திற்கு
ஒரு அளவில்லை.

நல்முத்தை நாடுபவர்க்குத்தானே அதன் பெருமை அருமை தெரிய வரும்.!
இந்த வைரத்தைப் பார்ப்பதே ஒரு வரம்.

இவரை நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பே சந்தித்திருந்தால் இலக்கிய உலகில் நான் சென்ற வழி வேறு மாதிரி இருந்திருக்குமோ ?

அவர் விடை பெற்று சென்ற பின்
ஜெயமோகன் அவர்களே என் வீடு தேடி வந்தாரோ என்ற ஒரு பிரமை.

உண்மை.புத்தக கண்காட்சியைப் பார்த்துவிட்டு அவரது கருத்துக்களைச் சொன்னார்.

அவர் சென்ற பின்பு தான் நினைவு வந்தது.
எனது மருத்துவர் அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று.

அவசர அவசரமாக ஓலா டாக்சி க்கு புக் செய்தேன்.
ஷார் டாக்சி தான் கிடைத்தது.

அதில் எனக்கு முன்பேயே ஒரு நபர்.
நானும் அவர் செல்லும் வழியிலே .அதனால் என்னையும் எற்றிக்கொண்டனர்.

ஏறும்போதே கார் வாடகையைத் தரவேண்டுமாம்.
ரூபாய் 114 தான். தனி மினி எடுத்தால் 300 ஆகும்.

வழி நெடுக ஒரு நடந்த கதையைச் சொல்லிக்கொண்டு வந்தார்

தொடரும்.

Tuesday, May 17, 2016

அலைகடலும் ஓய்ந்திருக்கஇங்கேயும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பாடலை கேட்கலாம். 

அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!

வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே

வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க

மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் டங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்

காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

Thursday, April 7, 2016

சன்னதியில் சாந்தம் கண்டேன்

திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் எழுதிய பாடல்.
அவரது வலையில் பிரசுரமாகி இருக்கிறது.

பாடுவது அல்லது பாடுவதாக நினைப்பது சுப்பு தாத்தா.
ராகம் அமீர் கல்யாணி. 

Thursday, January 7, 2016

காவியக்கவி கண்ணன்


காவியக்கவியின் கண்ணன் பாடல் .

மிகவும் ரசித்தேன். 
கரைந்துருகும் காலமிது என்னும்
பாடலின் வரிகளை ரசிக்க