Wednesday, June 17, 2015

அப்பாவும் மகளும். அப்பப்பா !!!

இன்னிக்கு அப்பா மகள் ஒருவருக்கு ஒருவர் ரிலேஷன்ஷிப் அதாவது
உணர்வு பூர்வமான உறவு முறை எப்படி இருக்கிறது என

ஒரு கதை மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
+Subbiah Veerappan
எனது வலை நண்பர் ஜோதிடர் திரு சுப்பையா அவர்கள். அவரது வகுப்பறை என்னும் வலைக்குச் சென்று உடன் இங்கே சென்று அந்தக் கதையை படியுங்கள்.

அதைப் படித்து விட்டு சிரித்து சிரித்து சிரிப்பதை நிறுத்த முடியாமல், உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் சுப்பு தாத்தா பொறுப்பல்ல.

இன்னொரு அப்பாவும் மகளும் இங்கே .  அப்பப்பா
நமக்குத் தெரிந்தவர்கள் தான்.

அன்புள்ள அப்பா

Monday, June 15, 2015

கருப்பை வெள்ளையாக மாற்றும்

வணக்கம் தாத்தா பாட்டி நலம் தானே!
இம்முறை பாடல் இன்னும் அழகாக வந்திருக்கிறது தாத்தா எப்படி நான் நன்றி சொல்வேன் என்று தவிக்கிறது மனம். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மிக்க நன்றி உங்கள் கருணைக்கு. பைந்தமிழ் என்னில்ஓர் பாகமா


 இதைப் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன். இதை சுப்பு தாத்தாவின் குரலில் கேட்க ஆசையாக உள்ளதாக ஊமைக்கனவுகள் viju வும் கேட்டிருந்தார்.

 எனக்கும் ஆசையாக உள்ளது.

 (click above.) கிளிக்குங்கள் மேலே )

நான் vacation ல் நிற்கிறேன் அமெரிக்காவில்

அதனாலேயே தாமதம். குறை நினைக்க வேண்டாம். மேலும் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்படிக்கு இனியா

 இனியா

 sury Siva 7:53 AM (1 minute ago) to Iniya

 மேடம் இனியா அவர்களுக்கு, வணக்கம். 
உங்கள் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கும் காலையிலே நீங்கள் சென்னையிலோ அல்லது நம் தமிழகத்தின் எங்கோ ஒரு ஊரில் இருப்பதாகத்தான் நினைப்பேன். நீங்கள் தங்களை ஏழ் கடலுக்கும் அப்பால் இருப்பதாகக் குறிப்பிட்ட பொழுது நான் நினைத்தேன்.எண் திசைகளில் நம் தமிழ் மக்கள் வாழ்ந்திடினும் அவர்களை எங்கனம் தமது தமிழ் ஒரு வட்டத்தக்குள் இல்லை ஒரு கோட்டுக்குள் அதுவும் இல்லை ஒரு புள்ளிக்குள் நிறுத்துகிறது, அது மட்டும் அல்ல, அவர்கள் உள்ளங்களை அத்தமிழ் கவிதைகள் இசையின் நமது பாரம்பரிய இசையில் மயங்கச் செய்கிறது என்பதை .நினைந்து கண்கள் பனிக்க உருகி நிற்கிறேன். தமிழ் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு அதுவும் மரபுக் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்புக்கள் பல தங்களைப் போன்றவர்களுக்கே அதிகம் உள்ளன. ஒரு இராமனுஜம், ஒரு பாரதிதாசன், மட்டும் இப்பணியில் பாடு படுகின்றனர். அவ்வப்போது அன்பர் சிவகுமாரன் பணியும் போற்றத்தக்கதே. ஆயினும் இவர்கள் மட்டும் போதாது. ஒரு தமிழினமே இதற்கான தொண்டைச் செய்யவேண்டும். நிற்க. தங்கள் கவிதைகள் எப்பொழுதுமே சொற்சுவை பெரிதும் கொண்டவை. தாங்கள் சாயி கவிதைகள் எழுதி அவற்றினை பாடியபொழுது நான் பெற்ற இன்பம் சொல்லிட இயலாது. இன்னும் எழுதுங்கள். உங்கள் பணி தொடர, சிறக்க , வான் அளாவி நின்று புகழ் பெற உங்களுடன் இறைவனின் ஆசிகள் என்றும் இருக்கும். நன்றி. சுப்பு தாத்தா. சொற்குற்றம், பொருட்குற்றம் பொறுத்திட வேண்டும்

. இவருக்காக நான் பாடிய பாடல் இதோ.  

துவக்கத்தில் பகுதாரி . முடிகையில் பாமினி 

இளைய ராஜா, இசை ஞானி அவர்களின் பாடல், 
பார்த்த விழி பார்த்த இடம்.பாடல் நினைவு இருக்கிறதா.
அற்புதமான பாடல். குணா என்னும் படம். 
கமல் சாரின் அற்புத நடிப்பு.

பாடலின் இறுதி பாக்கள். பாமினி @ கும்பினி எனும் ராகத்தில் உள்ளது. 

http://soundcloud.com/meenasury/iniyaamerica


அடுத்து, 

குழல் இன்னிசை பதிவு. 
பதிவர் யாதவன் நம்பி எனவும்
புதுவை வேலு எனவும் வளைய வரும் சொல் வள்ளல் பதிவாளர் அவர்களது 

வெண்ணிலவு கவிதை நான் தேஷ் ராகத்தில் பாடினேன்

Sunday, June 14, 2015

அப்பாதுரையின் "ஜீன்ஸி ராணி"

அப்பாதுரையின் " ஜீன்ஸி ராணி"
 சக்தியின் அவதாரம்.
 +Durai A
ஜான்சி ராணி யைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஜீன்ஸி  ராணி என்று பெயர் சூட்டி ஒரு சக்தியை போற்றும் வகையில்
ஒரு பதிவு படித்தேன்.

நேற்று, நடு நிசிக்கு சற்று முன்னே

என் வலை நண்பர் திரு .ஏ .துரை எனும் அப்பாதுரை அவர்களின் பதிவில்
ஒரு இடுகை கண்டேன்.

முதல் படிப்பிலே எனக்கு அதில் உப்போ உரைப்போ இருப்பதாக உறைக்கவில்லை .  நிகழ்ந்தது, வர்ணிக்கப்பட்டது,இன்றைய சமூகத்தில் மனித அன்றாட வாழ்விலே நடக்குமோர் நிகழ்வு  போல் தான் தோன்றியது.

கருத்துக்கள் இல்லை
என்ற இறுதி சொற்றொடர் அதுவரை அந்த இடுகைக்கு ஏதும் கருத்துகள், பின்னூட்டங்கள் பதியப்படவில்லை என உணர்த்தியது.

அப்போதைக்கு , எனக்கும்  ஒரு கருத்தும் இல்லை. என்பது உண்மைதான்.
ஆயினும் , முதல் கருத்து எனதாக இருக்கப்போகிறது என்றதால் அதை பார்த்து, நானும்,

//கருத்து இல்லை //
எஸ்.
என்று,
கருத்திட்டேன்.

எனக்கு அந்த நேரத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை . உண்மைதான்.

ஆதவன் இன்று பிறந்தான்.

 +Dindigul Dhanabalan
இன்று காலை கணினியைத் திறந்தபின்,
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எனது வலைப்பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு என்னை எங்கோ ஒரு பதவியில் அமர்த்தியது மட்டுமன்றி,

எனது அன்பு நண்பர் திரு அப்பாதுரை அவர்கள் வலையில்
ஒரு கருத்து இட்டு இருந்தார்.

எல்லா களேபரமும்  முடிந்தபின்  சக்தியின் அவதாரம்
 என 
இக்கருத்து அந்த பதிவின் உட்பொருளுக்கு எனை இழுத்துச் சென்றது. 


அந்தக் கருத்து  எனக்கு ஏற்புடைத்து என்பது மட்டும் அன்றி, எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் பல

காலம் கடத்தாது நான் ஒரு பின்னோட்டம் .அக்கருத்தை, பொன்.தனபாலன் அவர்கள் கருத்தை சிலாகித்து எழுதியிருந்தேன்.

அது இதுவே:

// எல்லாகளேபரமும்  முடிந்தபின்  சக்தியின் அவதாரம்//


உண்மை.
உயிரனம் தோன்றியதும் அதன்
ஒட்டு மொத்த பரிணாம இயல்பு வளர்ச்சியும்
இக்கருத்தை நிலை நிறுத்துகிறது.
எனர்ஜி இல்லாது மேட்டர் தண்டம்.
அது ஒரு கவர்ச்சிப்பொருள் ஆக துவக்கத்தில் இருக்கலாம்.
ஆனால், கவர் போய் விட்டால் சீ என்று தூக்கி எறியப்படும்
எந்தப் பொருளுமே
எத்தனை நாள் நினைவில் நின்று நிலைக்க இயலும் ?
ஆடம் இருந்து பிரயோஜனம் இல்லை என உணர்ந்த
ஆண்டவனும் அதனால் தானோ
இவளை இட பாகத்தினளை
ஈவ் ஆகப் படைத்திட்டனன்  போலும்.
உயிருக்கெல்லாம் ஊக்கத்துக்கேல்லாம்
எண்ணுக்கடங்கா ஏற்றங்களுக்கெல்ல்லாம்
ஐயமில்லை. ஒப்பிலாத
ஓங்காரமே அஃதே
எனர்ஜி இலாத மேட்டர் தண்டம் எனச் சொன்னேன்.
மேட்டர் இலாத எனெர்ஜி இருக்க இயலுமா?
இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக
அண்மையில் சில் ஆய்வுகள் எமை நம்பும் வகையில்
உண்மைகளை எடுத்துச் சொல்லுகின்றன.
சக்தி உள் இருப்பதால் அன்றி
சிவம் சவமே .
சக்தி இல்லையேல்
சந்ததிகள் இருக்க மாட்டார்கள் என்று கூட இல்லை.
சந்தியில் எப்பொருளும் திட நிலையில் அசைவற்ற நிலையில்
இருக்க இயலும்.
உண்மையில்,
சக்தி அசையச் செய்கிறது.
அமைதியைத் தருகிறது.
ஆனந்தத்தைத் தருகிறது.
இக லோக இன்பங்களை எல்லாம்
ஈகிறது.
அவ்வாறு இருக்கையில்,
பிரளயம் முடிந்து திரும்பவும்
தோன்றுதல் என ஒன்று
நிகழ்கையில்
சக்தியின் அவதாரம்
சத்யம், சிவம், சுந்தரம். 

சுப்பு தாத்தா.

 எழுதி முடித்தபின் அந்த மன நிலையில் இருந்து 
சற்று அத்திசையில் இருந்து மறுதிசைக் குச்செல்ல
பாடல் ஒன்று கேட்போம் என்று யூ ட்யூப் சென்றால்

அங்கும் ஒரு சக்தி அவதாரம்.

திருப்பூர் கம்பன் விழாவில், திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் உரை 
எனக்கு, 

ஒரு பெண்மணி தனது கருத்துக்களை எங்கனம் அழகாக, ஆணித்தரமாக, அவை அடக்கத்துடன், முன் வைக்கிறார்  என்பதை

வியப்புடன் பார்த்தேன். கேட்டேன்.

அந்த ஒளி ஒலி காட்டி , காணொளி, இங்கே இடுவதற்கு அனுமதி இல்லை.

ஆக, அதை இங்கே  சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

அருள் கூர்ந்து எல்லோரும் அந்த கானொளீயைக் கண்டு
ஒரு சக்தியின் சொல்வண்ணத்தை, சொற்த் திறமை தனை
கேட்டுப் பயனுறவேண்டும்.

அந்த மேடையில் மைக்கின் பெயரே சிவசக்தி.

பேசுவதும் அந்த சக்தி.யே.
*********************************************************************
அடுத்ததாக, நான் சென்றது எங்கள் ப்ளாக் வலைப்பதிவு.
அங்கே கண்ட நிழற்படம்.
இது எங்கள் பிளாக் ல் நான் பார்த்த படம்.

 படித்த கௌதமனின் வரிகள். 
கவலைப்படாதீங்க - கவிதை இலக்கண சுத்தமாக எல்லாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ நாலு வரி, உங்களுக்குத் தோன்றுவதை எழுதிடுங்க! 
                 
எல்லோரும் படித்து இன்புற (அல்லது துன்புற) வேண்டும். அம்புட்டுதான்! 
             +kg gouthaman 
 
கண்ட உடன் கவிதை எழதுங்கள் எனக்
கூவிட்ட கௌதமன் குரல் கேட்டு,
எழுதிய
ஏழு வாக்கியங்கள்.


என்ன நினைத்து எனை ஈன்றாயோ ?
ஏணிகள் பல காட்டி,
ஏற்றங்கள் பெற்றிட பனித்தாயோ !
சறுக்கி விழுந்தாலும்
சாதனைகள் புரியவேண்டி,
சுற்றும் இந்த சுழல் பாதையிலே
மாயக்காரனை மடியிலே வைத்தெனை
மயங்கி நிற்கச் செய்தாயோ !!

பள்ளி திறந்துவிட்டது.
அம்மா தரும்
பையும் புத்தகமும் பெற்றிடவே என்
கையைப் பிடித்துச் செல்.

என் செல்ல அம்மாவுக்கு.


சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

****************************************************************************

எனது இன்னொரு வலையில்
சுப்பு தாத்தா ஏதோ தேடப்போய் அவருக்கும் அவர் இல்லாளுக்கும்
இனியதோர் பனிப்போர்.

பார்க்க தவறாதீர்.
இங்கே கிளிக்கவும். 

நானும் என்னை மார்கெடிங் செய்யத் துவங்கிவிட்டேன். 
விதி யாரை விட்டது ???!!!




Thursday, June 11, 2015

வழி வலியாக மாறுகிறது.!!!


இன்று தான் கவனித்தேன்.

அவர் பெயர்

பொன். தன பாலன்.  அவரை நாம் அறிவது திண்டுக்கல் தனபாலன் என்றே.

பொன் போன்ற நல் உள்ளம் கொண்டவர் இதயம் தான் 
மண்ணில் உதித்தவர் எல்லோரும் போற்றிடும் 
விண்ணவருக்கும் பொருந்தும் 
வையகத்தாரை வழி நடத்தும் 
வள்ளுவத்தை 

தினந்தோறும் போற்றி மகிழும்.

நன்றி எனும் தலைப்பிலே அவர் இட்ட இடுகை என் இதயத்தை 
வென்று விட்டது என்று சொல்வினும் மிகையாகாது.

பத்து பாக்களுக்கும் பத்து விளக்கங்கள் . 
உத்துப் பார்ப்பவர்க்கு வழி காட்டும் விளக்குகள் .

படிக்கையிலே ஒரு வரி மட்டும் என்னை திருப்பித்திருப்பி மேலும் மேலும் படி,படி, படி என்று
அறிவுறுத்தியது.
+Dindigul Dhanabalan
வழி சில வேளையில் வலியாக மாறுகிறது.

வழி, வலி இந்த இரண்டு சொற்களையுமே பார்த்தேன்.

ஒன்றிலே இன்னொன்றும் இருக்கிறது.  வலி இல்லாமல் எந்த வழியும் இல்லை.

அந்த இடுகையிலே நான் இட்ட பின்னோட்டம் இதோ: 


உண்மைதான். இருப்பினும் வலி தராத வழி ஏதேனும் உண்டோ/

உடலை வருத்தி உழைத்து அதன் வழி கிடைக்கும் ஊதியத்தின் 
பலன்  மன அமைதி, உவகை,ஆனந்தம் எல்லாம் 
வலி தராத்  தொழிலில்  உண்டோ ?


மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

செல்லும் வழி நெடுகில் இடர்ப்பாடு கள்  வரத்தான் செய்யும். 

அந்த இடர்கள் தர இருக்கும் வலிகளை முன் நோக்கி அதற்கான  தீர்வுகளையும் தீர ஆலோசித்த பின் 

வள்ளுவன் வாய்மொழி யாம் 
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:429

என்ற குரளை நினைவில் இருத்தி, 
எந்த ஒரு செயலிலும் இறங்குவது நல்லது.


தாமரை வேண்டுபவன் சேற்றில் இறங்க வேண்டுமே என எண்ணிடலாமோ  ? முத்து எடுக்க நினைப்பவன் மூச்சு அடைக்க முடியுமா என ஐயப்பாடு கொள்வின் என்று தான் முத்து எடுப்பான் ?

 வலி வருமே என்ற அச்சப்படுபவள் 
 பிள்ளை பெற ஆசைப்படுவதும் சரியோ ?

எந்த ஒரு செயலிலும் 
ஆக்கமும் உண்டு.
அதிர்வும் உண்டு. 
ஆனந்தமும் உண்டு. 
ஆங்காங்கே 
ஆலகால விடமும் உண்டு. 

அதிகம் பேசிவிட்டேன்.

சுப்புத் தாத்தா.
பின்.குறிப்பு:
உங்கள் விளக்க உரை எளியவருக்கும் புரியும் வகையில் உள்ளது மெச்சத்தக்கது.  தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்க வளமுடன்.

****************************************************************
###############################################

அடுத்து,
இன்று என்னைக் கவர்ந்த இன்னொரு பதிவு.
+R.Umayal Gayathri
திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் இயற்றிய கிருஷ்ண கானம் 

க்ருஷ்ணப்பாவை என்னும் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

அது கிருஷ்ணனை நாம் அடையச்செல்லும் பாதை.

Courtesy:
http://www.bcagalleries.com/

இன்னும் சற்று நேரத்தில் அதையும் பாடி மகிழ்வேன்.







பாடலை இங்கேயும் கேட்கலாம்.


Wednesday, June 10, 2015

தென்றல்

தமிழ் வலை கவிஞர் சசிகலா அவர்கள் நேற்று எழுதிய தென்றல் வலைப்பதிவு பாடல் பிரமிக்க வைக்கும் படைப்பு ஆகும்.


அதைப்படிக்கும்பொழுதே பாடினேன் என்று சொல்வேன். எந்த இடத்திலும் எந்த தடங்கலும் வராது , முதல் வரிக்கு எந்த சந்தம் பொருத்தமானதோ அதுவே இறுதி வரை திடமாக இருந்தது.

சந்தத்துக்கு கட்டுப்பட்டு அதே சமயம் இனிமையாகவும் தெளிவாகவும், எளிதாகவும் எல்லோருக்கும் எளிதாய் புரியும்படியாகவும் இருப்பது சசிகலா அவர்களின் கவிதைகளே.

அதை படித்து, அதற்கு பின்னூட்ட பாராட்டு ஒன்றை கவிதை வடிவிலே இயற்றி பிரான்ஸ் நாட்டு கவிஞர் பாரதிதாசன் அனுப்பி இருக்கிறார். அதையும் நான் அதே ராகத்தில் பாடி மகிழ்ந்தேன்.

நான் பாடகன் அல்ல. ஒரு வாசகனே.எனக்கே தெரியும்.

இருப்பினும்
கவிதை என்றால் அதை படிக்கும் ஒவ்வொருவனையும்
பாடிடத் தூண்டுவதே ஒரு புலவனின் திறமை.

படிக்கும் எந்த வாசகனும் தத்தம் சூழ்நிலை மறந்து அந்தக் கவிதையிலேயே உள்ளம் நெகிழ்ந்து போவானாயின் அது தான் அவன் புலமை.

துவக்கத்தில் மரபு சாரா கவிதைகளை உருவாக்கிக் கொண்டு மகிழ்வித்த இவர், பிரான்ஸ் நாட்டு புலவர் பாரதி தாசன் அவர்களை தமது ஆசான் ஆகக்கொண்டுள்ளது இவரை
புதிய இலக்குடன், புதிய வேகத்துடன்
கவிதைகளைப் புனையத் தூண்டியுள்ளது  சொல்லலாம் . மிகையல்ல.



இது தமிழுக்கு இவர் சேர்க்கும் பெருமை.
இவரை வாழ்த்தி மகிழ்வது நமது கடமை.
********************************
*********************\

இன்று அமேரிக்காவில் இருக்கும் கவிதாயினி கவிநயா அவர்களின் செய்தி இதோ:

அன்பினிய தாத்தா,
அன்பான இனிய 74-வது பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா! இன்னும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருந்து எல்லாருடைய பாடல்களுக்கும் மெட்டமைத்துத் தர அன்னை அருளட்டும்.
பாடல் அருமையாக இருக்கிறது, இடுகையில் சேர்த்து விட்டேன் தாத்தா. அன்பான ஆசிகளுக்கும் மிக மிக நன்றி.
அன்புடன்
கவிநயா

2006  ம் ஆண்டு முதல் இது நாள் வரையில்
 ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் 
அம்மனைப் போற்றி கவிதை எழுதி
 அதைத் தனது வலை 
www.ammanpaattu.blogspot.com
இல்
இட்டு வருகிறார்கள். இது வரை ஒரு வாரம் கூட இந்த 186 ஆண்டுகளில் தவறியது இல்லை.நானே ஆயிரத்துக்கு மேலான இவரது பாடல்களுக்கு இசை அமைத்து இருக்கிறேன். 

அன்னையைப் போற்றுவது, அவள் அடிகளைத் துதித்து அவள் சரண்  அடைவதையே ஒரே நோக்கு, இலக்கு ஆகக்கொண்ட  இவரது ஆன்மீக வலை 
அம்மன் பாட்டு ஆகும்.


நேற்று அவர் வலையில் எழுதிய பாடல் இதோ: 
விடையேறி வர வேண்டும்
சிவனோடு வர வேண்டும்

உடம்போடு உயிர் உறவு

அறும் முன்னே வர வேண்டும்!


உள்ளத்தில் வர வேண்டும்

உன்நினைவைத் தர வேண்டும்

ஊனுருக உன் புகழைத்

தினம் பாடும் வரம் வேண்டும்!


கரும்பினிய என் தேவி

காப்பாற்ற வர வேண்டும்

கறுத்திட்ட கண்டனுடன்

கடிதேகி வர வேண்டும்!


குருவாகி வர வேண்டும்

குறை தீர்க்க வர வேண்டும்

மறை போற்றும் மாதவியே

மறு(ற)க்காமல் வர வேண்டும்!
--கவிநயா 

 இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து அவருடைய கருத்துகளுக்கு, பின்னூட்டங்களுக்கு தத்தம் வழிகளிலே இடம் தரும் 
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
எங்களது ஆசிகள்.


birthday wishes from google.

Tuesday, June 9, 2015

Ambal Adiyal

ambal adiyal paadiya paattu
www.rupika-rupika.blogspot.com

இன்று அம்பாள் அடியாள் அவர்கள் தனது வலையிலே இயற்றி இருக்கும் பாடலை என்னால் பாடாது இருக்க இயலவில்லை.

சொற்செறிவும் பொருட்செறிவும் ஒருங்கே இணைந்த இந்த பாடல்,
ஒவ்வொரு மனிதனும் மகாத்மா ஆக வழி ஒன்றை காட்டுகின்றது என்றால்
மிகையல்ல.

அம்பாள் அடியாள் அவர்களுக்கு எனது நன்றி.

இங்கேயும் பாடல் ஒலிக்கிறது. சொடுக்கினால் கேட்கலாம்.