Saturday, November 7, 2015

வாடும் மலரான வாழ்க்கை

பாவலர் புலவர் சசிகலா அவர்களின் வலைப்பதிவில் ஒரு பின்னூட்டம் அதுவே இனிய கவிதையாக பரிணமிக்கிறது.

அதை நான் இங்கு பாடுகிறேன்.  பின்னூட்டம் இட்டவர் ஊமைக்கனவுகள் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். அவர் வலை இது.  அங்கு நெளியும் பாம்பின் அசைவுகளில் மனம் செல்லாமல் தடுக்கிறது சசிகலா அவர்களின் வலையில் அவர் இட்ட பின்நூட்டக்கவிதை.

இந்தக் கவிதை ஒரு முறை அல்ல பல முறை படித்தேன்.
தேனாக இனிக்கிறது.

சந்தம் இங்கே சுந்தரமாக அல்லவா இருக்கின்றது.
இல்லை. அல்வா போல் இருக்கிறது.


தேடி அலைகின்ற மகவை அறியாமல்
      துரத்தும் தாயான சிந்தை!
   தெருவில் திரிந்தாலும் தினமும் அழுதாலும்
      வெறுக்கத் துணியாத விந்தை!
வாடும் மலரான வாழ்க்கை அதில்கொஞ்சம்
      வாசம் நிறைக்கின்ற சந்தம்!

   வற்றிக் கிடக்கின்ற வெற்றுச் சுனையூறி
      வறளும்…! சொல்லுக்கும் பஞ்சம்!
கோடி கவிகொண்ட தமிழின் கூட்டிற்குள்
      குலவும் தென்றலின் கீதம்,
   கொட்டும் மழைமேகக் குளிராய்க் கண்பட்டுக்
      குழையும், மனமுன்றில் மோதும்!

பாடிக் கடக்கின்ற பொழுதை வசமாக்கும்
      பாடம் அறிந்தீர்‘அப் பாங்கை
   “பாவம்…! நீயென்று படிக்க?“ எனக்கேட்டுத்
      தேங்கும் தமிழென்னில் ஏங்கும்!!!

No comments:

Post a Comment