Thursday, September 24, 2015

முருகா முத்தம் தருகவே

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

 என்று முருகனை ஏங்கி உருகும்  பாடல் உண்டு.
இங்கோ ,
தனது வயிற்று வலி தீர, முருகனை வேண்டும் ஒரு வைணவர்

முருகா எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு, ஆனா, உன் முத்தத்துக்கு 
விலை உண்டோ !

 என எழுதி இருக்கிறார். .

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்
பகழிக் கூத்தர் எழுதியது.

உரை தந்தது:
 வலை நண்பர்: ஜிரா.https://gragavanblog.wordpress.com/2015/09/24/priceless-kiss/
அவருக்கு எனது நன்றி.


கத்தும் தரங்கம் எடுத்தெறியக் 
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
 கரையில் தவழ்ந்து வாலுகத்திற் 
கான்ற மணிக்கு விலையுண்டு


 (தரங்கம் – கடல், சூல் – கரு, உளைந்து – வேதனைப் பட்டு, வாலுகம் – வெண்மணல் (வால் என்றால் வெண்மை நிறம்), கான்றல் – சொரிதல்)

தத்தும் கரட விகடதட 
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை 
தரளம் தனக்கு விலையுண்டு


 (கரடம் – மதம், விகடம் – உன்மத்தம் பிடித்து பார்ப்போர் நகைக்கும் வகையில் ஆடுதல், தடம் – மலை, தந்தி – யானை, மருப்பு – கொம்பு/தந்தம், தரளம் – முத்து)

தழைத்துக் கருத்து வளைந்தமணிக் 
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக் 
குளிர்முத் தினுக்கு விலையுண்டு (சாலி – நெற்பயிரின் வகை. சென்னையின் சாலிகிராமம் நெல்வயல்களாக இருந்ததால் அப்பெயர் பெற்றது)

கொண்டல் தகு நித்திலம் தனக்கு
 கூறும் தரமுண்டு உன் கனிவாய்
 முத்தம் தனக்கு விலையில்லை
 முருகா முத்தம் தருகவே 
முத்தம் சொரியும் கடலலைவாய்
 முதல்வா முத்தம் தருகவே. 


(கொண்டல் – மேகம், நித்திலம் – முத்து, முத்தம் – முத்து, கடலலைவாய் – திருச்செந்தூர்)

இதைக் கேட்ட முருகப் பெருமான் தனது இரத்தின மாலையைக் கழட்டிக் கொடுத்ததாக சரித்திரம் பேசுதாம் .

இந்தப் பதிவில் பின்னூட்டம் தந்த எனது வலை நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் சொல்வார்:
பாடலில் 5 முத்து-முத்தங்களைச் சொல்லும் கவிஞர்!
1. கடல் முத்து
2. யானைத் தந்தம் நுனி முத்து
3. நெல் முத்து
4. மழை முத்து
5. முருகன் முத்து(ம்)


இதையே நம்ம ஊரு புலவர்கள்
குறிப்பா மரபு சாரா கவிஞர் பலரும்
 எழுதினா
எப்படி எழுதுவாங்க. ?
+sasikala2010eni@gmail.com
ஆனா இவங்க எல்லாரும் பக்திப் பாடல்
பாடுவாங்களா அப்படின்னே தெரியல்லையே...

பாரீஸ் புலவர் பாரதி தாசன் அவர்கள் கிட்ட ஒரு அப்பீல் பண்ணிப் பார்ப்போமா ??  ஆசிரியர் சொன்னால் மாணவர்கள் கேட்பார்கள்.
அது  அந்தக் காலத்துலே
அப்படின்னா சொல்றீங்க...!!!


Wednesday, September 23, 2015

வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் இனிய கதையே. இனிய சுவையே

என்னாடா ஒரு கொண்டாட்டமா இருக்குன்னு கொட்டகைக்குள்ளே நுழைஞ்சு சுப்பு தாத்தாவும் மீனாக்ஷி பாட்டியும் எட்டிப் பாத்தாங்க..ஆஹா.!! துளசி கோபால் க்கு இன்னிக்கு பிறந்த நாள் . அதான் இந்த அமக்களம். குதூகலம்.
ஸ்ரீமதி துளசி கோபால், திரு கோபால் இருவருக்கும் எங்கள்
ஆசிர்வாதங்கள்.
+Tulsi Gopal
அன்று மைலாபூர் உங்கள் அகத்துக்கு பக்கத்தில் நடை பெற்ற 60வது ஆண்டு விழாவில்

அக்கார வடிசல் சாப்பிட்டது இன்னமும் இனிக்கிறது.

துளசி கோபால் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு பக்கமும்
இனிய கதையே.  இனிய சுவையே 

+revathi 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த உடன் பிறவா சகோதரி திருமதி வல்லி நரசிம்மன் அவர்களுக்கு எங்களது நன்றி. அவரது பக்கத்தில் வாழ்த்துச் செய்தி கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.   அங்கும் சென்று பார்க்கவும். 

. HEARTY GREETINGS TO MADAM THULASI GOPAL AND GOPAL SIR ON THE EVE OF BIRTHDAY CELEBRATIONS.

பிறந்த நாளை ஒட்டி ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்.ALL OUR BEST BLESSINGS.

Sunday, September 20, 2015

இந்த பேஸ் புக்

 பேஸ் புக் கா
 பேஸ் லுக் கா ?


லுக்  கிட்டு போறவங்க சிலர்.
புக் பண்றவங்க சிலர்.
சிக் எனப் பிடித்துக்
கொள்பவர்களும் இருக்காங்க.
சிலரோ
கிக் பண்றாங்களே !!

என்னத்தை சொல்வது !!

எனி வே,
ஐ ஆம்
சிக் அபௌட் திஸ்
புக்.
 பெட்டர் வீ கால் இட்
பேஸ் லஸ் குக்.
எங்கள் ப்ளாக் லே என்னோட பின்னோட்டம். இதுவே.

+Balu Sriram
+Gowthaman K G 

Saturday, September 19, 2015

இளைய நிலா விநாயகன்

YOUR SONG IS OK.YOUR VELLA  KOZHUKKATTAI OK. நேத்திக்கே விநாயக சதுர்த்தி முடிஞ்சு போச்சு, BUT U CAME LATE. NEXT TIME U ASK THATHA TO SING IN TIME. YES, MY LORD!


சரி விநாயகா, லேட்டா வந்தது தப்பு தான்.
 இப்ப நான் பிராயச்சித்தம் ஆ என்ன செய்யணும்?

ஒன்னும் ஸ்பெசல் ஆ வேண்டாம்.
உன் என். ஆர். ஐ. பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம்
இந்த சைட்டுக்கு போய், 
தமிழ் வலைப்பதிவர் மா நாட்டுக்கு ரிஜிஸ்தர் செய்யச் சொல்.


ஐயா......  நாங்க வெளிநாட்டு லேந்து.......

சொன்னதைச் செய்.

ஓம் மகா கணபதியே நமஹ

Wednesday, September 16, 2015

மூன்று பெண்மணிகள்

இன்று நான் படித்த வலைப்பதிவுகளில் மூன்று
என்னை மட்டும் அல்ல
என் போன்றவர்களை சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன்.
மூன்று பெண்மணிகள். முதலிலே ஒரு மொழி பெயர்ப்பாளர், அடுத்து ஒரு திக்கற்ற பெண்ணின் தாய், மூன்றாவது ஒரு அன்னை.
+mohan gurumurthy
முதலாவது திரு மோகன்ஜி அவர்கள் வலைப்பதிவு. 
திருமதி கீதா மதிவாணன்  அவர்களின் "என்றாவது ஒரு நாள்" எனத் தலைப்பினைக் கொண்ட அண்மைய மொழி ஆக  நூலின் ஒரு கருத்துரையாக இந்த பதிவு இருக்கின்றது.

ஒரு மொழிப்பெயர்ப்பு என்றால் அந்த ஆக்கத்தைக் கையாளுபவர் திறன் குறித்தும், அதைப் படிப்பவர் மன நிலை, அவர்களுடைய மன நிலைபாடுகள்,
குறித்தும் இவர் சொல்லும் கருத்துக்கள் எல்லோரையுமே குறிப்பாக, மொழி பெயர்க்கும் ஆற்றல் படைத்தோருக்கும், அந்நிய இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வலர்களுக்கும் அவசியம்.

இதைப்படித்த எனது பின்னூட்டம் இது.

மொழியாக்கத்தினை படிப்பவரின் மனவோட்டமும் முன்முடிபுகளும் கூட இங்கு கவனம் கொள்ளத்தக்கது. ///

பல நேரங்களில், மொழி பெயர்ப்பு நூலை படிப்பவர் முன்னமேயே அதன் மூலத்தையும் படித்திருக்கும் சாத்தியக் கூறுகளும் உண்டு.
இரண்டாவது, மொழி பெயர்ப்போர் பெரிதும் தாம் மொழி பெயர்த்திடும் நூலினை அம்மொழி பேசப்படும் மக்கள் தம் இயல்பு நடையில் சொல்லாது, தத்தம் சொற்கட்டுத் திறனைக்  காட்டிடவே செய்கின்றனர்.
மூன்றாவது, மொழி பெயர்ப்பில் தனது முன் மன உறுதிப் பாடுகளை நுழைத்து விடுகின்றனர். மொழி பெயர்க்கவேண்டும், அதே சமயம் தமது நிலைப்பாடுகளையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர் உண்டு. இவர்களின் மொழி பெயர்ப்பில் இவர்களது மொழி வல்லமை தெரிகிறதே தவிர, மூலத்திற்கு அவர்கள் செய்யும் நீதியாக என்னால் கருத இயலவில்லை.
இதைத் தவிர, சிலர் இந்த "செப்பிடு வேலையில்" தன்னாலும் முடியும் என்று காட்ட வேண்டும் அல்லது தனக்கும் அந்த மொழியிலோ அந்த நூலிலோ பாண்டித்தியம் உண்டு எனப் பிரதர்சனம் செய்ய ஆவலுற்று, அந்த நூலில் முன்னமேயே ஏதேனும் இரண்டு மூன்று மொழி பெயர்ப்புகளைப் படித்து விட்டு , தனக்குப் புரிந்த  வகையில், எதை மொழி பெயர்ப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மொழியே தெரியாத நிலையில் கூட , தான் மொழி பெயர்த்ததாக கூறும் நிலை பார்க்கிறேன். இவர்களைக் கண்டால், மனம் இவர்களைப் பார்த்து வருத்தம் தான் கொள்கிறது.
இதைப் பற்றி இன்னமும் சொல்ல இரண்டாயிரம் சொற்கள் இரண்டு நாட்கள் வேண்டும்.
நீங்கள் கருத்துரை வழங்கி இருக்கும் திருமதி கீதா அவர்களின் நூலை வாங்கியேனும் படிக்கவேண்டும் என்ற ஆவலைக் கிண்டி  இருக்கிறீர்கள் .
வழக்கம் போல, உங்களது பதிவு
வாழை இலை விருந்து.
சுப்பு தாத்தா.

******************************************************************************************
அடுத்ததாக, நிலாமகள் என்னும் பறத்தல் பறத்தல்-நிமித்தம் என்னும் வலைப்பதிவில் ஒரு காட்சி. 
 +Nilaa maghal 
 +நிலா மகள் 
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை இரப்பல் - கடிகமழ்ந்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெம் சாலேகம் சாரா நட -முத்தொள்ளாயிரம் 50

 இந்தக் காட்சி முத்தொள்ளாயிரத்திலே வரும் காட்சி. பதிவரோ அதற்கென
ஒரு கதை ( கற்பனை தான் என நினைக்கிறேன்.) புனைந்து இருக்கிறார். அதைப் படிக்கும்போது கண்கள் குளமாகின என நான் சொல்வது மிகையல்ல.
நீங்கள் அந்தக் கதையைப்ப்டடிக்கவேண்டும்.

இந்தப் பதிவுக்கு நான் இட்ட பின்னோட்டம் இது.

விதி எனச் சொல்லி ஓடிப்போவதா ?
மதி இழந்த செயலது. நான் என் செய்வேன் எனச் சொல்வதா?
பதி என்றவன் தன்னைக்
கதியற்று நிற்கச்செய்து
நிதி கொண்டு வா இல்லையேல்
நீ இல்லை எனச் சொல்கிறானே...
நீதி எங்கே ? மனு
நீதிச் சோழா நீ வந்து
சொல்.
சுப்பு தாத்தா. 
 ***********************************************************************************
மூன்றாவதாக,
அம்மாவை நினைவு கூர்ந்து எழுதுவோருக்கு பஞ்சமில்லை.
அண்மையிலே விஜய் டி.வி. யில் நீயா நானா வில் பங்கு எடுத்துக்கொண்ட ஒரு தாய், இந்த மாதிரி அம்மாவைப் புகழ்வதில் ஒரு செயற்கைத் தன்மை இருக்கிறதோ என்று மட்டுமல்ல, அம்மாவை ஒரு காமெடி மாதிரி ஆக்கிவிட்டார்களோ என்றும் ஐயப்பட்டார். அந்த அளவுக்கு அம்மாவை பாலாபிஷேகம் செய்கிறோம் என்கிறார்.
அப்படிப்பட்ட சூழலில் தனது அம்மாவை அல்ல, தனது கணவரின் அம்மா,
மாமியாரைப் போற்றும் ஒரு பதிவு "ஒரு அருமை அன்னையின் தினம் " என்று ஒரு தலைப்பு உடன் எழுத , மிக்க பெருந்தன்மை வேண்டும். அப்படி தனது மருமகளால் போற்றப்படவேண்டும் என்றால், அந்த மாமியார் எத்துணை பெருந்தன்மை, கருணை உள்ளம் படைத்தவராக இருக்கவேண்டும்.!!

உண்மையிலே பார்த்தால் மாமியார் கொடுமை என்பதே  ஒரு பர்செப்ஷன். எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் மிகவும் சுமூகமான உறவு காணப்படுகிறது.
+revathi narasimhan
மாமியாரைப் புகழும் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் பதிவு இங்கே. அதற்கு எனது பின்னோட்டம் இது.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என நினைத்த, நினைக்கின்ற, நினைக்க இருக்கும்
பெண்மணிகள் எல்லோருமே
சிறந்த பெண்களாக, குடும்பத் தலைவிகளாக, மாமியார்களாக,
விளங்குகிறார்கள்.
இவர்கள் "தெய்வத்துள்" போற்றப்படுவது
நாமும் போற்றுவது இயல்பே.
பாசம் என்ற சொல்லை ஒரு சிறிய வளையத்துக்குள் பதுக்காது ,
பாச வலைதனை பரப்பி எல்லோரையும் அணைக்கையில்,
ஒரு பையனுக்குத் தாயார் என்ற நிலையில் இருந்து
பத்மாக்ஷி தாயார் ஆகிவிடுகிறார்.
சுப்பு தாத்தா. 
 
மாமியாரோடு இருக்கும் மருமகள் யாவருமே இந்தப் பதிவினைப் படிக்கவேண்டும். நீங்கள் இது போன்ற ஒரு பதிவு எழுதவேண்டும் என நான் சொல்லவில்லை. இது போன்ற மாமியாராக, நீங்கள் ஒரு எதிர்காலத்தில், பிரகாசிக்கவேண்டும்.

Saturday, September 12, 2015

ஆதலால் பிறவி வேண்டேன்

இன்று காலை வலைச்சரத்தைப் படித்ததே பெருமாள் கிருபை. அரங்கனின் அருள் எனச் சொல்லவேண்டும். 

எனது வலை நண்பர் திருவாளர் ரிஷபன் அவர்கள் பெரிய ஜீயர் என்று போற்றப்படும் ஸ்ரீ மணவாள மா முனிகள் பற்றி எழுதியதைப் படித்தேன். 
பின்னே அவரது ஒரு பாசுரத்தையும் என்னால் இயன்றவாறு பாடினேன்.

நீங்கள் இனி படிப்பது ரிஷபன் அவர்கள் எழுத்து.
இருக்கும் இடம். வலைச்சரம்.www.blogintamil.blogspot.com
 ****************************************************************************
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்


பெரிய ஜீயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அரங்கனுக்கே ஆசார்யன் என்கிற பெருமை பெற்றவர். ஒரு வருட காலம் அரங்கன் தம் உற்சவங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு இவருடைய திருவாய்மொழி காலட்சேபத்தை (சொற்பொழிவை) கேட்டு மகிழ்ந்தாராம். இறுதி நாளன்று ஒரு பாலகனாய் வந்து மேலே சொன்னதை குரு வாழ்த்தாய் அருளினாராம்.
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பசி பிணி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே


ஆழ்வார் பாசுரத்தின் அழகைப் பாருங்கள்.  வேதம் சொல்லிய 100 வயதுக் காலம் ஒருவர் வாழ்வதாய்க் கொண்டால் அதில் எப்படி எல்லாம் வீணாகிறது என்கிற தவிப்பு.. பேதை.. பாலகன்.. அது ஆகும் என்று பருவங்களைப் பிரிக்கிறார்.  இளைஞனாய் இருக்கும் காலத்தை ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.
ஒரு இளைஞன் எப்படி உருவாகிறானோ அதுவே அவன் பிற்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால்.. யவ்வன அவஸ்தையை.. அது என்று நயமாகக் குறிப்பிட்டு காட்டுகிறார். 

******************************************************************************
பாடுவது சுப்பு தாத்தா.
கேட்பது:  ???????
ரிஷபன் சாருக்கு நன்றி என சொல்லலாம் என்று பார்த்தேன்.
இருந்தாலும், ரங்கனே ரிஷபனாக வந்திருப்பார் சொல்லி இருப்பார் என்று தோன்றியது.
ரங்கா ரங்கா
நான் அரங்கம் வரும் நாள்
நின்னடி சேருங்கால்,
நன்றி ஒன்றல்ல, இரண்டல்ல,
நான் கடைத்தேறும் வரை
சொல்லிக்கொண்டே இருப்பேன்.

+Rishaban Srinivasan

Friday, September 11, 2015

2015 10 11 ???


புதுகையிலே முனைவர் முத்து நிலவன் அவர்கள் தலைமையிலே
தமிழ் பதிவர் மா நாடு
நடைபெற உள்ளது.

அதை வாழ்த்தும் வகையிலும் வர இருக்கும் அனைவரையும்
உளமார வரவேற்கும் வகையிலும்
அங்கே என்ன பல நல்ல விஷயங்கள்
நடக்க இருக்கின்றன என்பதை
நமது நண்பர்
திரு கில்லர்ஜி
ஒரு பாடல் மூலம்
வர்ணிக்க
அத
சுப்பு தாத்தா
பாடுகிறார்.

யாரு வருவாங்களோ
இத எல்லாரும் பாத்து கேட்டு ரசிப்பாங்க.

+

Conference at Pudukottai 11th october 2015

Sunday, September 6, 2015

கொத்துமலர் பூங்கொடியே

காவியக்கவி இனியா அவர்களின் நாமகள் துதி. 
அற்புதம். 
ஹம்சத்வனி ராகம் தொனிக்க பாடி இருக்கிறேன்.

காவியக்கவி இனியா அவர்கள் வலைக்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல இங்கே சொடுக்குங்கள். 

தமிழ் வலைப்பதிவாளர் மாநாடு 11.10.15 அன்று புதுக்கோட்டை யில் நடை பெற உள்ளது. அதில் பங்கு பெற இங்கு பதிவு செய்யுங்கள். 

கோகுலாஷ்டமி, பூஜை செய்தபின், உப்பு சீடை , வெல்ல சீடை சாப்பிட இங்கே பதிவு செய்யுங்கள்.
Saturday, September 5, 2015

யாதவன் நம்பி பாடும் மாதவன் மது சூதனன்
அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!
திரு யாதவன் நம்பி
http://kuzhalinnisai.blogspot.com/

சுப்புதாத்தா பாடுகிறார்.
ராகம் சிந்து  பைரவி.
எல்லோருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

யாதவன்   நம்பி பாடும் மாதவன் மது சூதனன்
எல்லோருக்கும் அருள் புரிவான்

Wednesday, September 2, 2015

நாமகளே நல்ல தமிழ் நாவினிலே ஊறி வர....

இனியா அவர்கள் தனது வலை காவியக் கவி யிலே தமது நாமகள் கவிதையை இட, நாமும் அதைப் பாடி மகிழ்ந்தோம்.

இனியாவுக்கு எமது இனிய நன்றி.

நாமகளே நல்ல தமிழ் நாவினிலே ஊறி வர....