Tuesday, May 17, 2016

அலைகடலும் ஓய்ந்திருக்க



இங்கேயும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பாடலை கேட்கலாம். 

அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!

வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே

வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க

மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் டங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்

காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

No comments:

Post a Comment