Wednesday, May 6, 2015

ஆனந்த பைரவி

வலை நண்பர் திரு ஸ்ரீராம் அவர்கள் தியாகராஜ சுவாமிகள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து உள்ளார்.
+Balu Sriram 
ஒரு இசை வல்லுநர் பாடகர் சுவாமிநாதன் என்பவர் ஆனந்த பைரவி ராகத்தில் மிகவும் திறம் படைத்தவராக விளங்கினார். அவரைப் பற்றி கேள்விப்பட்ட தியாகய்யர் அவர் பாடுவதை ரசிக்கச் செய்ய, தியாகய்யரிடம் சுவாமிநாதன் ஒரு வரம் கேட்டாராம்.

நீங்கள் இனி ஆனந்த பைரவி ராகம் பாடக்கூடாது என்று.  தியாகய்யரும் சரி என்று சொல்லிவிட்டாராம். 

அதனால் தான், தியாகராஜ சுவாமிகள் அன்று வரை ஆனந்த பைரவி யில் இட்ட 3 கீர்த்தனைகளுக்குப்பின் வேறு எதுவும் அதே கீர்த்தனையில் இட வில்லை என்ற செய்தி
இந்த வலைப் பதிவு சொல்கிறது. 

இதைப் படித்த உடன் எனக்குத் தோன்றியதை ஒரு பின்னூட்டமாக எழுதியதை கீழே தந்து இருக்கிறேன். 

அதை படிக்குமுன்பு, இன்னொரு சந்தேகம் ஐயம் மனதில் வருகிறது. 
+Geetha Sambasivam 
உதாரணமாக, வலை நண்பர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் பலவித பதார்த்தங்களை சமைப்பது எப்படி என்று நுட்பமாக விவரிக்கின்றனர்..  அவர் செய்த மோர்குழம்பு மிகப்பிரமாதம் என்று பலரும் பாராட்டினர் என்றால், அதை 

நீங்கள் யாருமே மோர்குழம்பு தயார் செய்யும் பாணியை விவரிக்ககூடாது என்று 144 போட்டால் எப்படி இருக்கும் !!

இன்னொரு உதாரணம். 
பெருமாள் உத்சவ காலத்தில் ஒரு நாள் மோகினி அவதாரம். என்று புடவை உடுத்துகிறார் .அந்த அலங்காரத்தைப் பார்த்து மகிழாதவர் இருக்க முடியாது. தாயாரே அதைப் பார்த்து மனதுக்குள் சிரித்து மகிழ்வாரோ என்னவோ...

எ"ன்னை விட உங்கள் அலங்காரத்தை தான் பக்தர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, நீங்கள் இனி மோகினி அவதாரம் எடுக்கக் கூடாது "என்று அவர் பெருமாளிடம் சொன்னால் எப்படி இருக்கும் !!
என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன். 

சரி. 

நான் இட்ட பின்னூட்டத்தைப் படிக்கவும். 
எனக்கு என்னவோ அந்த சுவாமிநாதன் கேட்ட வரம் 
சரி எனத் தோன்றவில்லை. 

தான் ஒரு குறிப்பிட்ட 
காரியத்தில், அல்லது பொருளில் திறமை வாய்த்தவர் என்பதற்காக, மற்ற எவரும் அந்த காரியத்திர்குள்ளே வரக்கூடாது என்று 
சொல்வது அல்ல நினைப்பது கூட மனதில் ஏற்படும் பொறாமை தான் என நினைக்கத் தோன்றுகிறது. 

இரண்டாவது விஷயம் சொல்லவேண்டும். ராகங்களைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ராகத்திற்கும் ஆரோஹனம், அவரோஹனம் என்று ஸ்வரங்களை சீர் படுத்தி இருப்பினும், அதை எந்த வாறு அந்த ஸ்வரங்களை உபயோகப்படுத்தி, பாடுவது, முக்கியமாக ஆலாபனை அல்லது, கீர்த்தனை நடுவே ஸ்வரங்கள் பாடுவது அவரவர் கற்பனை திறம், அதன எல்லை யைப் பொறுத்தது. 

அண்மையில், இளைய ராஜா அவர்கள் மோகனம் என்று நினைக்கிறேன். ஆரோகனத்தில் மட்டுமே ஒரு பாட்டு முழுக்க ஸ்வரம் இட்டு இருக்கின்றார். இதுவரை இசை உலகில், எந்த ஒரு கம்பொசருமே நினைத்துப் பார்க்ககூட சாதனை இது. 

இன்னொரு சமயம், ஒரு ராகத்தில் மூன்று ஸ்வரங்களை மட்டும் எடுத்து பிரயோகம் செய்து இருக்கிறார்.  

இதெல்லாம் முக்கியமாக கர்நாடாக சங்கீதம் ஒரு எவலூஷணரி ப்ராசஸ் ல் இன்னமும் இருக்கிறது   பால முரளி சில புதிய ராகங்களை வகுத்து இருக்கிறார். 

நல்ல வேளை ..  அந்த சுவாமிநாதன் ஆனந்த பைரவி ராகத்தை தான் மட்டும் தான் பாடவேண்டும் என்று சொல்லவில்லை. 

தானும் சிறக்கவேண்டும். மற்றவர்களும் சிறக்கவேண்டும் என்று நினைப்பதுவே மனித நேயம். 

அது தான் வின் வின் சிச்சுவேஷன். 

சுப்பு தாத்தா.