Saturday, June 27, 2015

ஷிர்டி சாயீ பஜன்.


 ingu ungal paadal ketkalaam. raakam.theva gandhari.

இனியா காவியக்கவி இயற்றிய பாடல் இது.

இதை முதலில் மோகன ராக சாயலில் பாடினேன்.

அற்புதமான கவிதை இது.

இதை இன்னொரு ராகம் தேவ காந்தாரி , அதிலும் பாட மனம் விழைந்தது.

இனியாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சாயியின் மகிமை அறியவும்
அவர் அருள் வேண்டும்.

இங்கேயும் இந்தப் பாடல் ஒலிக்கிறது. 

வரும் 
வழியில் ,
தமிழ் வலையில் 
நான் கண்ட பின்னோட்டம் இது. சாரி, பின்னூட்டம். 
நான் எழுதியது அல்ல.  எந்த பதிவுக்கு ? என்றும் சரியாக நினைவுக்கு வரவில்லை. 


  கண்ணால் காணாத ஒரு ஆலமரத்தை ஒரு விதையைக் காட்டி அதற்குள் மறைந்திருப்பதாய்ச் சொன்னால் எப்படி நம்பக் கடினமானதோ அப்படிப்பட்டதுதான் அவரின் இருப்பும். 

மஹா சமுத்திரத்தில் காய்ச்சாமல் கோடி கோடி டன்களாய் மறைந்திருக்கும் உப்பைக் கண்ணால் காணமுடியாது- அதன் சுவையை நாக்கால் உணர்ந்தாலும். தீவட்டியின் துணையோடு ஒரு பொருளைத் தேடுவது போல 

ஞானத்தினால் அந்த குணங்களைத் தேடுகிறோம். தேடியது கிடைத்தபின் தீவட்டியின் துணை தேவையில்லை.

 இல்லை, கிடைக்காது, முடியாது போன்ற வார்த்தைகளை விட உண்டு, கிடைக்கும், முடியும் என்ற வார்த்தைகள் தரும் உற்சாகமும், நம்பிக்கையும் அளவிடற்கரியவை. 

நாம் தேடுவது எது, எதற்காக என்பதன் விஸ்தீரணத்துக்கு ஏற்ப அந்தப் பயணம் முடிவடைகிறது அல்லது நீள்கிறது. 

 என் சொற்ப அனுபவத்தில் இருப்பதிலேயே விற்பதற்கு மிகக் கடினமான பொருள் ஆயுள் காப்பீடு தான். கண்ணால் காணமுடியாதது என்பதாலேயே அதன் அருமை யாருக்கும் அத்தனை எளிதில் புரியாது. அன்பு,பரிவு,மன்னிப்பு,நன்றி பாராட்டுதல், பசி நீக்குதல் இன்னும் இதுபோன்ற பல மேன்மையான குணங்களை யாரெல்லாம் ப்ரதிபலிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கடவுள். 

 நாம் இருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்லவருகிறோம் அப்பாதுரை. உண்டு என்று நான் துவங்குகிறேன். இல்லை என்று நீங்கள் துவங்குகிறீர்கள். 

நாமிருவரும் சந்திக்க நேரும் புள்ளியில் இருவரிடமும் அந்த இரு வார்த்தைகளும் கூட உதிர்ந்துபோய் விடும் நிலையில் தரிசிக்கும் அனுபூதிதான் அந்த மறைபொருள்
 *************************************************************************

அநுபூதி என்ற சொல்லுக்கு 
கந்தர் அனுபூதியிலே அருணகிரி நாதர் சொல்வதை 
நன்றியுடன் நினைக்கிறேன்.  ( நன்றி: கௌமாரம் .காம்.)

 உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.

......... பதவுரை .........

உல்லாச ... மங்காத உள்ளக் களிப்பும்,

நிராகுல ... துன்பமற்ற நிலையும்,

யோக ... யோக சொரூபனும்,

இத ... நன்மை பயப்பவனும்,

சல்லாப விநோதனும் ... அடியார்களிடம் இனிமையாகவே பேசி
திருவிளையாடல் புரிபவனும்,

நீ அலையோ ... நீ தானே முருகா,

எல்லாம் அற ... உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ,

என்னை இழந்த நலம் ... நான் எனும் ஜீவ போதம் இழந்து
அனுபவிக்கும் பேரின்ப நிலையை,

சொல்லாய் ... மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும்.

......... விளக்கவுரை .........

சகல பற்றுகளையும் கடந்த நிலையை 'எல்லாம் அற' என்று
குறிப்பிடப்படுகிறது. இதில் அகப் பற்று, அதாவது உயிர் மேல்
வைத்திருக்கும் பாசம், புறப் பற்று, என்னுடைய இல்லம் 'என்னுடைய
குடும்பம்' முதலிய உலக பசு பாச தொந்தங்கள் அடங்கும். இவை
நீங்கினவுடன் நான் .. எனது என்னும் ஜீவ போதத்தை இழந்து
இறைவனுடன் கலந்து நீவேறெனாதிருக்க நாவேறெனாது இருக்கும்
நிலை அடைந்து, ஜீவன் முத்தி நிலை அடையப்பெற்றால் அந்த
அனுபவத்தை வாய் விட்டு கூற இயலாது.

   .. வாய் விட்டு பேச ஒண்ணாதது ..

.. என்கிற 'வாசித்துக் காணொணாதது' (பாடல் 561) திருசிராப்பள்ளி
- திருப்புகழ் அடியைக் கவனிக்கவும்.

மற்றுமொரு யோகக் குறிப்பும் இதில் காணலாம். அநுபூதி நிலையை
முருகன் அருளால் அடையப்பெற்று மறுபடியும் ஜீவ நிலைக்கு திரும்பி
வரும்போது வாய் பேச முடியாது. பேச்சு திரும்புவதற்கு சில நாட்கள்
ஆவதை சித்தர்களின் வரலாற்றில் காணலாம். எப்போதும்
உள்ளக்களிப்புடன் இருப்பவனும், துன்பம் சிறிதும் இல்லாதவனும்,
எல்லாவித பேறுகளையும்பெற்று அவாப்த சமஸ்த காமனாய்
இருப்பவனும், அடியார்களுடன் மகிழ்ச்சியுடன் சம்பாஷித்துக்
கொண்டிருப்பவனும், பல லீலைகளை புரிபவனும் நீதானே முருகா?
ஆதலால் உன் அருளால் எனக்குக் கிடைத்த இந்தப் பேரானந்த
நிலையை நீயே அனைவருக்கும் எடுத்துக் கூறவேண்டும்.