Wednesday, June 10, 2015

தென்றல்

தமிழ் வலை கவிஞர் சசிகலா அவர்கள் நேற்று எழுதிய தென்றல் வலைப்பதிவு பாடல் பிரமிக்க வைக்கும் படைப்பு ஆகும்.


அதைப்படிக்கும்பொழுதே பாடினேன் என்று சொல்வேன். எந்த இடத்திலும் எந்த தடங்கலும் வராது , முதல் வரிக்கு எந்த சந்தம் பொருத்தமானதோ அதுவே இறுதி வரை திடமாக இருந்தது.

சந்தத்துக்கு கட்டுப்பட்டு அதே சமயம் இனிமையாகவும் தெளிவாகவும், எளிதாகவும் எல்லோருக்கும் எளிதாய் புரியும்படியாகவும் இருப்பது சசிகலா அவர்களின் கவிதைகளே.

அதை படித்து, அதற்கு பின்னூட்ட பாராட்டு ஒன்றை கவிதை வடிவிலே இயற்றி பிரான்ஸ் நாட்டு கவிஞர் பாரதிதாசன் அனுப்பி இருக்கிறார். அதையும் நான் அதே ராகத்தில் பாடி மகிழ்ந்தேன்.

நான் பாடகன் அல்ல. ஒரு வாசகனே.எனக்கே தெரியும்.

இருப்பினும்
கவிதை என்றால் அதை படிக்கும் ஒவ்வொருவனையும்
பாடிடத் தூண்டுவதே ஒரு புலவனின் திறமை.

படிக்கும் எந்த வாசகனும் தத்தம் சூழ்நிலை மறந்து அந்தக் கவிதையிலேயே உள்ளம் நெகிழ்ந்து போவானாயின் அது தான் அவன் புலமை.

துவக்கத்தில் மரபு சாரா கவிதைகளை உருவாக்கிக் கொண்டு மகிழ்வித்த இவர், பிரான்ஸ் நாட்டு புலவர் பாரதி தாசன் அவர்களை தமது ஆசான் ஆகக்கொண்டுள்ளது இவரை
புதிய இலக்குடன், புதிய வேகத்துடன்
கவிதைகளைப் புனையத் தூண்டியுள்ளது  சொல்லலாம் . மிகையல்ல.இது தமிழுக்கு இவர் சேர்க்கும் பெருமை.
இவரை வாழ்த்தி மகிழ்வது நமது கடமை.
********************************
*********************\

இன்று அமேரிக்காவில் இருக்கும் கவிதாயினி கவிநயா அவர்களின் செய்தி இதோ:

அன்பினிய தாத்தா,
அன்பான இனிய 74-வது பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா! இன்னும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருந்து எல்லாருடைய பாடல்களுக்கும் மெட்டமைத்துத் தர அன்னை அருளட்டும்.
பாடல் அருமையாக இருக்கிறது, இடுகையில் சேர்த்து விட்டேன் தாத்தா. அன்பான ஆசிகளுக்கும் மிக மிக நன்றி.
அன்புடன்
கவிநயா

2006  ம் ஆண்டு முதல் இது நாள் வரையில்
 ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் 
அம்மனைப் போற்றி கவிதை எழுதி
 அதைத் தனது வலை 
www.ammanpaattu.blogspot.com
இல்
இட்டு வருகிறார்கள். இது வரை ஒரு வாரம் கூட இந்த 186 ஆண்டுகளில் தவறியது இல்லை.நானே ஆயிரத்துக்கு மேலான இவரது பாடல்களுக்கு இசை அமைத்து இருக்கிறேன். 

அன்னையைப் போற்றுவது, அவள் அடிகளைத் துதித்து அவள் சரண்  அடைவதையே ஒரே நோக்கு, இலக்கு ஆகக்கொண்ட  இவரது ஆன்மீக வலை 
அம்மன் பாட்டு ஆகும்.


நேற்று அவர் வலையில் எழுதிய பாடல் இதோ: 
விடையேறி வர வேண்டும்
சிவனோடு வர வேண்டும்

உடம்போடு உயிர் உறவு

அறும் முன்னே வர வேண்டும்!


உள்ளத்தில் வர வேண்டும்

உன்நினைவைத் தர வேண்டும்

ஊனுருக உன் புகழைத்

தினம் பாடும் வரம் வேண்டும்!


கரும்பினிய என் தேவி

காப்பாற்ற வர வேண்டும்

கறுத்திட்ட கண்டனுடன்

கடிதேகி வர வேண்டும்!


குருவாகி வர வேண்டும்

குறை தீர்க்க வர வேண்டும்

மறை போற்றும் மாதவியே

மறு(ற)க்காமல் வர வேண்டும்!
--கவிநயா 

 இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து அவருடைய கருத்துகளுக்கு, பின்னூட்டங்களுக்கு தத்தம் வழிகளிலே இடம் தரும் 
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
எங்களது ஆசிகள்.


birthday wishes from google.