Saturday, September 12, 2015

ஆதலால் பிறவி வேண்டேன்

இன்று காலை வலைச்சரத்தைப் படித்ததே பெருமாள் கிருபை. அரங்கனின் அருள் எனச் சொல்லவேண்டும். 

எனது வலை நண்பர் திருவாளர் ரிஷபன் அவர்கள் பெரிய ஜீயர் என்று போற்றப்படும் ஸ்ரீ மணவாள மா முனிகள் பற்றி எழுதியதைப் படித்தேன். 
பின்னே அவரது ஒரு பாசுரத்தையும் என்னால் இயன்றவாறு பாடினேன்.

நீங்கள் இனி படிப்பது ரிஷபன் அவர்கள் எழுத்து.
இருக்கும் இடம். வலைச்சரம்.www.blogintamil.blogspot.com
 ****************************************************************************
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்


பெரிய ஜீயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அரங்கனுக்கே ஆசார்யன் என்கிற பெருமை பெற்றவர். ஒரு வருட காலம் அரங்கன் தம் உற்சவங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு இவருடைய திருவாய்மொழி காலட்சேபத்தை (சொற்பொழிவை) கேட்டு மகிழ்ந்தாராம். இறுதி நாளன்று ஒரு பாலகனாய் வந்து மேலே சொன்னதை குரு வாழ்த்தாய் அருளினாராம்.
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பசி பிணி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே


ஆழ்வார் பாசுரத்தின் அழகைப் பாருங்கள்.  வேதம் சொல்லிய 100 வயதுக் காலம் ஒருவர் வாழ்வதாய்க் கொண்டால் அதில் எப்படி எல்லாம் வீணாகிறது என்கிற தவிப்பு.. பேதை.. பாலகன்.. அது ஆகும் என்று பருவங்களைப் பிரிக்கிறார்.  இளைஞனாய் இருக்கும் காலத்தை ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.
ஒரு இளைஞன் எப்படி உருவாகிறானோ அதுவே அவன் பிற்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால்.. யவ்வன அவஸ்தையை.. அது என்று நயமாகக் குறிப்பிட்டு காட்டுகிறார். 

******************************************************************************
பாடுவது சுப்பு தாத்தா.
கேட்பது:  ???????




ரிஷபன் சாருக்கு நன்றி என சொல்லலாம் என்று பார்த்தேன்.
இருந்தாலும், ரங்கனே ரிஷபனாக வந்திருப்பார் சொல்லி இருப்பார் என்று தோன்றியது.
ரங்கா ரங்கா
நான் அரங்கம் வரும் நாள்
நின்னடி சேருங்கால்,
நன்றி ஒன்றல்ல, இரண்டல்ல,
நான் கடைத்தேறும் வரை
சொல்லிக்கொண்டே இருப்பேன்.

+Rishaban Srinivasan

No comments:

Post a Comment