Thursday, September 24, 2015

முருகா முத்தம் தருகவே

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

 என்று முருகனை ஏங்கி உருகும்  பாடல் உண்டு.
இங்கோ ,
தனது வயிற்று வலி தீர, முருகனை வேண்டும் ஒரு வைணவர்

முருகா எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு, ஆனா, உன் முத்தத்துக்கு 
விலை உண்டோ !

 என எழுதி இருக்கிறார். .

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்
பகழிக் கூத்தர் எழுதியது.

உரை தந்தது:
 வலை நண்பர்: ஜிரா.https://gragavanblog.wordpress.com/2015/09/24/priceless-kiss/
அவருக்கு எனது நன்றி.


கத்தும் தரங்கம் எடுத்தெறியக் 
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
 கரையில் தவழ்ந்து வாலுகத்திற் 
கான்ற மணிக்கு விலையுண்டு


 (தரங்கம் – கடல், சூல் – கரு, உளைந்து – வேதனைப் பட்டு, வாலுகம் – வெண்மணல் (வால் என்றால் வெண்மை நிறம்), கான்றல் – சொரிதல்)

தத்தும் கரட விகடதட 
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை 
தரளம் தனக்கு விலையுண்டு


 (கரடம் – மதம், விகடம் – உன்மத்தம் பிடித்து பார்ப்போர் நகைக்கும் வகையில் ஆடுதல், தடம் – மலை, தந்தி – யானை, மருப்பு – கொம்பு/தந்தம், தரளம் – முத்து)

தழைத்துக் கருத்து வளைந்தமணிக் 
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக் 
குளிர்முத் தினுக்கு விலையுண்டு



 (சாலி – நெற்பயிரின் வகை. சென்னையின் சாலிகிராமம் நெல்வயல்களாக இருந்ததால் அப்பெயர் பெற்றது)

கொண்டல் தகு நித்திலம் தனக்கு
 கூறும் தரமுண்டு உன் கனிவாய்
 முத்தம் தனக்கு விலையில்லை
 முருகா முத்தம் தருகவே 
முத்தம் சொரியும் கடலலைவாய்
 முதல்வா முத்தம் தருகவே. 


(கொண்டல் – மேகம், நித்திலம் – முத்து, முத்தம் – முத்து, கடலலைவாய் – திருச்செந்தூர்)

இதைக் கேட்ட முருகப் பெருமான் தனது இரத்தின மாலையைக் கழட்டிக் கொடுத்ததாக சரித்திரம் பேசுதாம் .

இந்தப் பதிவில் பின்னூட்டம் தந்த எனது வலை நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் சொல்வார்:
பாடலில் 5 முத்து-முத்தங்களைச் சொல்லும் கவிஞர்!
1. கடல் முத்து
2. யானைத் தந்தம் நுனி முத்து
3. நெல் முத்து
4. மழை முத்து
5. முருகன் முத்து(ம்)


இதையே நம்ம ஊரு புலவர்கள்
குறிப்பா மரபு சாரா கவிஞர் பலரும்
 எழுதினா
எப்படி எழுதுவாங்க. ?
+sasikala2010eni@gmail.com
ஆனா இவங்க எல்லாரும் பக்திப் பாடல்
பாடுவாங்களா அப்படின்னே தெரியல்லையே...

பாரீஸ் புலவர் பாரதி தாசன் அவர்கள் கிட்ட ஒரு அப்பீல் பண்ணிப் பார்ப்போமா ??  ஆசிரியர் சொன்னால் மாணவர்கள் கேட்பார்கள்.
அது  அந்தக் காலத்துலே
அப்படின்னா சொல்றீங்க...!!!


No comments:

Post a Comment